உதகை, அக்.12- ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலையை அனுப விக்கவும் மற்றும் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க வும் நாள்தோறும் தமிழ்நாடு மட்டு மின்றி வெளி மாநிலத்தை சேர்ந்த ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆயுத பூஜை மற் றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங் களுக்கு 3 நாட்கள் தொடர் விடு முறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங் களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெள்ளியன்று காலை முதலே உதகை தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். 2 ஆவது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட் டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து குழந்தைகளுடன் விளை யாடியும் தங்கள் விடுமுறையை கழித் தனர். இதைபோல் உதகை ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் காணப்பட்டது.