districts

img

திருப்பூர் மாவட்ட மாநாடு: வரவேற்பு குழு கூட்டம்

அவிநாசி,அக்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாட்டு தயாரிப்பு பணிகளை செம்மைப்படுத்த, அவிநாசி யில் வியாழனன்று மாவட்ட மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம்  நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 24  ஆவது மாநாடு டிசம்பர் மாதம், 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில்  அவிநாசியில் நடைபெற உள்ளது. நவம்பர் புரட்சி தினத்தை  நினைவு கூர்ந்து, டிசம்பர் ஒன்றாம் தேதி அவிநாசியில் செம் படை பேரணி நடத்துவது என திட்டமிட்டுள்ளது. இம் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. அவிநாசி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த  வரவேற்புக் குழுவிற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்  வெங்கடாசலம் தலைமை ஏற்றார்.  மாநாட்டு வரவேற்புக் குழு  தலைவராக முத்துசாமி, செயலாளராக ஈஸ்வரமூர்த்தி, பொருளாளராக பழனிச்சாமி உள்ளிட்ட 21 பேர் கொண்ட நிர் வாகிகள் மற்றும்  75 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்புக் குழு  அமைக்கப்பட்டது.  இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ்,  மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் மற்றும்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், மூர்த்தி, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.