பணம் கேட்டு மிரட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை,அன்னூர் அருகே குமாரபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் விபத்தில் உயிரிழந்த வழக்கில், குடும்பத்தினருக்கு இழப்பீடாக 50 லட்சம் கிடைத்துள்ளது.
இழப்பீடு பெற உதவியதாக கூறி 10 லட்சத்தை பறித்துக்கொண்ட பாஜகவினர் , பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை சொல்லி மேலும் 10 லட்சம் கேட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, பாஜக உறுப்பினர்கள் கோகுல கண்ணன்(26), சாமிநாதன்(53), ராசுகுட்டி(26) ஆகியோரை அன்னூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த திருமூர்த்தியின் சகோதரர் அருணாச்சலம் பாஜகவினரின் மிரட்டல் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட காணொலி வைரலானது குறிப்பிடத்தக்கது.