districts

img

திருப்பூரில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முதல் நாள் எதிர்பார்த்த கூட்டம் இல்லை

திருப்பூர், ஜன. 10 – பொங்கல் பண்டிகைக்கு திருப்பூ ரில் இருந்து பல்வேறு மாவட்டங்க ளுக்கு வெள்ளிக்கிழமை முதல் சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்  முதல் நாள் எதிர்பார்த்த கூட்டம் வர வில்லை. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன, நாளை (சனிக்கிழமை) மாலை முதல் கூட்டம்  வரும் என்று எதிர்பார்ப்பதாக போக்குவ ரத்துத் துறையினர் தெரிவித்தனர். திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம் ஆகிய இடங்க ளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களுக்கு 502 சிறப்பு பேருந்து கள் ஜன.10ஆம் தேதி முதல் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை யினர் சிறப்பு பேருந்துகளை முதல் நாள் வெள்ளியன்று இயக்கத் தொடங்கி னர்.  எனினும் வெள்ளியன்று மாலை  வரை போதிய கூட்டம் வரவில்லை. திருப்பூரில் பல பனியன் நிறுவ னங்களில் சனியன்று வேலை உள்ள தால், அதன் பிறகே விடுமுறை விடுவார் கள். எனினும் முன்னெச்சரிக்கையாக வெள்ளியன்றும் சிறப்புப் பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பனி யன் நிறுவனங்களில் சனிக்கிழமை மாலை வேலை முடிந்த பிறகு, வாரச்  சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு பொங் கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குப் பயணத்தைத் தொடங்குவார்கள். எனவே சனியன்று மாலை முதல் கூட் டம் வரும் என எதிர்பார்ப்பதாக போக்கு வரத்துத் துறையினர் கூறினர்.  தேவைப்படும் அளவு பேருந்து களை இயக்க போக்குவரத்துத் துறை  தற்போது தயார் நிலையில் உள்ளது.  பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப பேருந் துகளை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து இயக்கப்படும். அதற் கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்று  அதிகாரிகள் கூறினர்.  முன்னெச்சரிக்கை பணியில் காவலர்கள்: அதேபோல் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு மாநகரம் முழுவதும்  காவல் துறையினரும் பாதுகாப்புப் பணி களில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, பின்.என். சாலை, மங்கலம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பேருந்து  நிறுத்தங்கள், குறுக்கு சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும்  வகையில் தடுப்பான்கள் அமைத்துள்ள னர். மேலும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஒருவழி சாலையாக மாற் றப்பட்டு, பாதுகாப்பிற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புது மார்க்கெட்  வீதியில் வெள்ளிக்கிழமை முதலே கூட்ட நெரிசல் காணப்பட்டது. அந்த சாலையில் கூடுதல் காவலர்கள் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.