நாமக்கல், நவ. 4- எலச்சிபாளையம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் பேரவை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்க்கும் இயக்கம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக எலச்சி பாளையம் மல்லசமுத்திரம் மேற்கு கிழக்கு ஒன்றியக் குழுவின் சார்பில் சேர்க்கப்பட்ட சந்தா ஒப்படைக்கும் பேரவை நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.தேவராஜன், ஒன்றி யக் குழு உறுப்பினர் சி.சக்திவேல் தலைமை வகித்தனர். கட்சியின் மேற்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.ரமேஷ், மாவட்ட குழு உறுப்பி னர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் எஸ். முத்துக்கண்ணன், மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், எஸ்.தமிழ் மணி, சு.சுரேஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர் தங்கராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, நடைபெற்ற பேரவை கூட்டத்தில் ஒன்றியம் முழுவதும் சேர்க்க பட்ட, 28 ஆண்டு சந்தா, 53 அரை வருட சந்தா என 81 சந்தாக்களுக்கான தொகை ரூ.1 லட் சத்து 11 ஆயிரத்து 650 ரூபாய் வழங்கபட் டது. முடிவில், ஒன்றியக் குழு உறுப்பினர் பி. கிட்டுசாமி நன்றி கூறினார்.