districts

img

களையிழந்த அன்னூர் ஆட்டுச் சந்தை

கோவை, டிச.20- சபரிமலை மற்றும் பழனி சீசன் காரண மாக, அன்னூர் ஆட்டுச் சந்தைக்கு வியாபாரி கள் வரத்து குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். கோவை, அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவ சாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். அன்னூரை சுற்றி யுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடு கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின் றன. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெ றும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங் கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக் கம். இந்நிலையில், வார இறுதி நாளான சனி யன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை 5  மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கி யது. வியாபாரிகள் வரத்து குறைந்ததால் விற்பனையும் மந்தமாகவே நடைபெற்றது. இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்ய  வந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பக்ரீத், ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீல கிரி மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, கேர ளம் மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் அன்னூர் ஆட்டுச் சந்தைக்கு வந்து செல்வார்கள். அப் போது சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். வழக்கமான வார இறுதி நாட்களில் கூட சுமார் 50 முதல் 80  லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால், தற்போது ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருப்ப தால் இறைச்சி விற்பனை வெகுவாக குறைந் துள்ளது. இதன் காரணமாக வியாபாரிக ளும் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்க  பெரிய அளவில் ஆர்வம் செலுத்தவில்லை. வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையி லேயே ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை யாகி வருகின்றன. இதனால் ஆடுகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.