நீலகிரி: 56 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்
உதகை, டிச.20- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின், நீலகிரி மாவட்டத்தில் 56 ஆயிரத்து 91 வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், நீலகிரி மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தண்ணீரு வெள்ளியன்று வெளியிட்டார். அதில், எஸ்ஐ ஆர்-க்கு பிறகு ஆண்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 759, பெண் கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 299, மாற்று பாலினத்தவர்கள் 18 என மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்க ளில் கண்டறிய முடியாத வாக்காளர்கள் 5,863 பேர், நிரந்தர மாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 27,939 பேர், இறந்த வர்கள் 18,975 பேர், இரட்டைப்பதிவு வாக்காளர்கள் 3,292 பேர், இதர வாக்காளர்கள் 22 பேர் என மொத்தம் 56,091 வாக்கா ளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும், 690 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், வாக்குச்சாவடி மறு சீரமைத்தலின்போது புதிதாக 49 வாக்குச் சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டு, 3 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடி மையங்களு டன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குச்சாவடி சீரமைத்தல் பணிக்கு பின்னர் தற்போது மொத்தம் 736 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
ஈரோடு, டிச.20- ஈரோட்டில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை கள் தின விழாவில், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட் டன. சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வியா ழனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரி யத்தில் புதியதாக உறுப்பி னர்களாக இணைந்த 15 நபர்களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை கள் வழங்கப்பட்டன. இதைத் தொடாந்து, சிறுபான்மையி னர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் வருமா னம் ஈட்டுதலுக்கான செயல் பாடுகளுக்கு (துணி வியாபா ரம், தையல் தொழில், மளிகை கடை, கைத்தொ ழில், சிக்கன் சென்டர், எண் ணெய் வியாபாரம், பிரி யாணி வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள்) துவங்க குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் என 20 பயனா ளிகளுக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி வழங்கி னார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலர் கோ. முரளி, சிறுபான்மையினர் நல அலுவலர் (கண்காணிப் பாளர்) முருகேசன், அரசு காஜி கியாபத் துல்லா உட் பட துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் பங்கேற்ற மாவட் டச் செயலாளர் ப.மாரி முத்து, சிறுபான்மை மக்க ளுக்கு வீட்டுமனை மற்றும் கபர்ஸ்தான் இடம் வழங்கக் கோரி மனு அளித்தார்.
மயான வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு
திருப்பூர், டிச. 20 – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடை பெற்றது. இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஜெ.முகமது ரஃபி, செயலாளர் முகமது ஹசன், பொருளாளர் அஜ்மத்துல்லா உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதிதாக பள்ளிவாசல், மதரஸாக்கள் கட்டுவதற்கு இடை யூறு ஏற்படுத்தும் சங் பரிவார் சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். அவிநாசியில் கபர்ஸ்தானுக்கு கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் வழித்தடப் பிரச்சனையை தீர்க்க வேண்டும், எஸ்.பெரியபாளையம் அல்லது ஊத்துக்குளி புற நகரில் புதிய கபர்ஸ்தான் தேவை உள்ளது. திருப்பூர் தெற்கு பகுதியில் கிழக்குப் பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய கபர்ஸ்தான் ஏற்படுத்தித் தர வேண்டும். வடக்குப் பகுதி ஆத்துப்பாளையம் கபர்ஸ்தானில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், சமத்துவபுரம், நாதம்பாளையம், தியாகி குமரன் காலனி, கணக்கம்பாளை யம், தோட்டத்துப்பாளையம் போன்ற பகுதிகளில் வாழும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ் தான் ஏற்படுத்தி தர வேண்டும். ஆங்கில வழிப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் நிர்பந்த அடிப்படையில் சீருடைகள் வழங்கி உள்ளதால் அவர் கள் ஹிஜாப் பின்பற்றும் முறையை கடைப்பிடிப்பதற்கு சிரம மாக உள்ளது. இதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்த நொய்யல் பண்பாட்டு அமைப்பு முடிவு
திருப்பூர், டிச.20 - திருப்பூரில் நான்காவது ஆண்டு பொங்கல் விழா குறித்து நொய்யல் பண்பாட்டு அமைப்பின் வரவேற்புக்குழு அமைப்பு, ஆலோசனைக் கூட்டம் கடந்த புதனன்று நடைபெற் றது. திருப்பூர் காங்கேயம் சாலை பொதிகை மஹாலில் நடை பெற்ற வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்திற்கு நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் மு.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். செயலாளர் ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜனவரி 15ஆம் தேதி திருப்பூர் நொய்யல் கரையில் 4ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கு வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் பொங்கல் திருவி ழாவிற்காக பல்வேறு பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. பொது நிர்வாகக்குழுவில் அரிமா மு.ஜீவானந்தம் (ஒருங்கி ணைப்பாளர்), ஆர்.ஈஸ்வரன், மோகன் கார்த்திக், மு.திருப் பதி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர, விருந்தினர்கள் வரவேற்புக்குழு, நிதிக்குழு, சமத்துவப் பொங்கல் குழு, உணவுக்குழு, மேடை நிர்வாகக் குழு, கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்புக்குழு விளம்பரக் குழு, ஒழுங்காற்றுக்குழு உள்ளிட்ட பல்வேறு பணி குழுக்கள் அமைக்கப்பட்டன.
வேடபட்டியில் பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி
உடுமலை,டிச.20- பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்ட தொட்டி பராமரிப்பு இல்லா மல் உள்ளதால், உடனடியாக ஊராட்சி நிர்வா கம் குடிநீர் தொட்டியை பராமரிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் வேட பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா குடியி ருப்பில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டியில், திருமூர்த்தி அணையில் இருந்து வரும் கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோ கிக்கப்படுகிறது. இந்த தொட்டியை முறை யாக பராமரிப்பு இல்லாததால், தொட்டியில் உள்ள விரிசலில் ஆலமரம் தழைத்து வளர்ந்து வருகிறது. இந்த மரத்தின் வேர்கள் தொட்டியின் சுவர்களுக்குள் ஊடுருவி வள ரும் போது, விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் அபாயம் உள்ளது.எனவே இந்த தொட்டி களை மாதம் ஒரு முறை மருந்து தெளித்து, சுத் தம் செய்த பிறகே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இதை பின்பற்றாததால் செடிகள் முளைக்கும் நிலை உள்ளது. குடிநீர் தொட் டியை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். மேலும் தூய்மையான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்ப குதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு
உடுமலை, டிச.20- திருமூர்த்தி அணையில் இருந்து ஆலாம் பாளையம் பகுதியில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், வரும் டிச.22 ஆம் தேதி முதல் டிச.25 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு உடுமலை பிர தான கால்வாயில் இருந்து மனுப்பட்டி கிளை கால்வாய் வழியாக 20 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, 60 அடிஉயரமுள்ள, திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 50.61 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 72 கன அடியாகவும் உள்ளது.
லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது
சேலம், டிச.20- ஓமலூர் அருகே புதிய மின் இணைப்பு பெற திட்ட மதிப்பீடு வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்தவர் சுகன்யா. இவர் புதிய வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறு வதற்கு கருப்பூர், வெள்ளாளப்பட்டியில் உள்ள மின் சார அலுவலகத்தில் பணியாற்றி வரும் வணிக ஆய்வா ளர் இளையராஜாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அவர் மின் இணைப்புக்கான கம்பம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்குவதற்காக ரூ.8 ஆயி ரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத் தார். இதனையடுத்து ஆய்வாளர் நல்லம்மாள், நரேந்திரன் மற்றும் போலீசார் வெள்ளியன்று இரவு வெள்ளாளப்பட்டி மின் அலுவலகத்திற்கு சென்று ஆங் காங்கே மறைந்திருந்தனர். இவர்கள் கூறியபடி ரசாய னம் தடவிய 8 ஆயிரம் பணத்தை சுகன்யா கொடுக்கும் பொழுது அங்கிருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து வணிக ஆய்வாளர் இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டுனர்.
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு
கோபி, டிச.20- நம்பியூர் அரசு கலைக்கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் செயல்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்பு ணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) தமிழ்மணி தலைமை வகித்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் சரஸ்வதி வரவேற்றார். வணிக நிர் வாகவியல் துறை தலைவர் யூனூஸ் வாழ்த்திப் பேசி னார். இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் பிரனேஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு கள் குறித்தும், தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விளக்கினார். அதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி சங்கீதா, காணொலி காட்சி மூலமாக புகையிலை பயன்படுத்துவதால் ஏற்ப டும் விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கி னார். தமிழ்த்துறை ஆசிரியர்கள் சரஸ்வதி, மகேந்தி ரன், நிஷாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில், தீபலட்சுமி நன்றி கூறினார்.
வரி செலுத்தவில்லையென்றால், அபராதமாக 6 ஆண்டு கட்டணம்!
ஈரோடு, டிச.20- சொத்து வரி விதிப்பு செய்யப்படாத கட்டடங்க ளுக்கு அபராதத்துடன் வரி விதிக்கப்படும் என்று சத்தி யமங்கலம் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளியன்று கூறுகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் புதி தாக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலர் சொத்து வரி விதிப்பு செய்யப் படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், வீட்டின் மேல் பகுதியில் கட்டப்படும் குடியிருப்புக்கும் சொத்து வரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள் ளது. வரி விதிப்பு செய்யப்படாமல் இருக்கும் கட்டிடங் களைக் கண்டறிந்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டு உரிமையாளர் கள் தானாகவே முன்வந்து தங்களின் கட்டிடங்க ளுக்கு வரி விதிப்பு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 97-ன்படி, 6 ஆண்டுகள் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். எனவே, வரும் 3 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்த வேண்டும், என்றார்.
முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியவருக்கு அபராதம்
ஈரோடு, டிச.20- பர்கூர் மலைப்பகுதியில் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத் துள்ள பர்கூர் மலைப்பகுதி, ஒந்தனை ஆழ் வார்த்தி பகுதியில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அங்கப்பன் மற்றும் பர்கூர் வனத் துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மின்சாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்படு கிறதா? என கூட்டாய்வு நடத்தினர். இதில் ஒந்தனை ஆழ்வார்த்தி பகுதியைச் சேர்ந்த பசு வன் என்பவர், பட்டா நிலத்தில் முறையற்ற வகையில் வீட்டிற்கும், தனது விவசாய நிலத் திற்கும் மின்வேலி அமைத்து மின்சாரத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரத்து 875 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப் பட்டது. இதன்பின் அதிகாரிகள் கூறுகையில், அனுமதியற்ற முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவதால், மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பும், பாதுகாப்பற்ற முறையில் மின்வேலியில் மின்சாரம் செலுத் துவதன் மூலம் வனவிலங்குகள் உயிரி ழப்பை தவிர்க்கவும் ஆய்வுசெய்து நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென தெரி வித்தனர்.
கொடநாடு வழக்கு: 3 பேருக்கு பிடிவாரண்ட்
உதகை, டிச.20- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட நாட்களாக நீதிமன்றத் தில் ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி முரளித ரன் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலை மையில் சிபிசிஐடி போலீசார் ஆஜராகி னர். அதேபோல குற்றம்சாட்டப்பட் டுள்ள வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜரா காத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோ ருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தர விட்டார். வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜன.30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தர விட்டார். இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் கனகராஜ் கூறுகையில், இந்த வழக்கில் பிஎஸ்என்எல், இன்டர் போல் காவல் துறையிடம் விவ ரங்கள் பெற ஒன்றிய அரசின் அனுமதி கடிதம் கிடைத்ததும், வழக்கு விசா ரணை 75 சதவீதம் நிறைவடைந்து முக் கிய திருப்பங்கள் ஏற்படும், என்றார்.
அணைகள் நிலவரம் (சனிக்கிழமை)
சோலையார் அணை
நீர்மட்டம்:125/160 அடி
நீர்வரத்து:97.91கனஅடி
நீர்திறப்பு:170.00கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:69.10/72 அடி
நீர்வரத்து:235கனஅடி
நீர்திறப்பு:285கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:115/120அடி
நீர்வரத்து:86கனஅடி
நீர்திறப்பு:210கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:50.61/60அடி
நீர்வரத்து:72கனஅடி
நீர்திறப்பு:673கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:84.14/90அடி
நீர்வரத்து:267கனஅடி
நீர்திறப்பு:25கனஅடி