100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள சட்ட நகலை எரித்து விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கவுந்தபாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் கே.ஆர்.விஜயராகவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
