districts

img

ஜவுளி உற்பத்தியில்…

இந்தியாவில் ஜவுளி, ஆடை  தயாரிப்பு தொழிலானது விவசாயத்துக்கு அடுத்தபடியாக சுமார் 11 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாட்டின் ஒட்டு மொத்த ஏற்று மதியில் 11 சதவீதமும், மொத்த தொழில்துறை உற்பத்தியில் 12 சதவீத அளவுக்கும் ஜவுளித் துறையின் பங்கு உள்ளது. இந் திய ஜவுளித் துறையின் மிக முக் கிய இடமாக இருக்கும் தமிழ் நாடு, நாட்டின் ஜவுளி வணி கத்தில் மூன்றில் ஒரு பங்கும், நூற்புத்திறனில் சுமார் 45 சத வீதம் பங்கும் வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.75 ஆயி ரம் கோடி அந்நிய செலாவ ணியை ஈட்டுவதுடன், சுமார் 60  லட்சம் பேர்களுக்கு நேரடி  வேலைவாய்ப்பை வழங்குவது டன், சுமார் ரூ.30 ஆயிரம் கோடிக்கு  சரக்கு, சேவை வரியையும் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இந்த பெரு மைக்கு கோவை மண்டலம் தான்  முக்கிய காரணமாக உள்ளது. நாட்டிலுள்ள மொத்த நூற்பாலை களின் எண்ணிக்கையில் 52 சத வீதம் அதாவது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பஞ்சா லைகள் தமிழகத்தில் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை கோடி பேல்கள் பருத்தியை உபயோ கித்து,

இந்தியாவின் மொத்த நூல்  உற்பத்தியில் 47 சதவீத நூல் உற் பத்தி இங்கு செய்யப்படுகிறது.  அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள விசைத்தறிகளில் 22 சத வீதமும், கைத்தறிகளில் 12 சதவீத மும் தமிழகத்தில்தான் உள்ளன. நாட்டின் 70 சதவீத பருத்தி பின்ன லாடை தயாரிப்பு தொழில் தமி ழகத்தில்தான் உள்ளது. தமிழ கத்துக்கு சுமார் ஒன்றரை கோடி  பேல்கள் பருத்தி தேவைப்பட்டா லும், அதில் 5 லட்சம் பேல்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் உற் பத்தி செய்யப்படுகின் றன. தமிழக ஜவுளித் துறை மூலம்  மாநில அரசுக்கு சுமார் ரூ.5 ஆயி ரம் கோடி வரை வருவாய் கிடைக் கிறது. மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஜவுளித் தொழில் இருக்கும் நிலையில், பருத்தி  விலையில் நிலவும் ஏற்றத்தாழ்வு கள், செயற்கை இழை பஞ்சு மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணை கள் போன்றவற்றால் பஞ்சாலைத்  தொழில் முடங்கும் நிலையில்  இருக்கிறது என்கின்றனர் தொழில் முனைவோர்.

தமிழ்நாட்டில் செயற்கை இழை களை பயன்படுத்தி தயாரிக்கப் படும் ஜவுளிகளின் அளவு அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் நிலை யில் இந்த தரக்கட் டுப்பாட்டு ஆணை யில் விஸ்கோஸ் இழை, பாலியெஸ் டர் இழை, நூல்  ஆகியவை இடம் பெற்றிருப்பது தொழில் முனைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலியெஸ்டர் முழுமையாக நீட்டப்பட்ட நூல், பாலியெஸ்டர் பகுதி நீட்டப்பட்ட நூல், தொழில் துறைக்கான பாலியெஸ்டர் நூல், 1 00 சதவீத பாலியெஸ்டர் ஸ்பன்  கிரே, வெள்ளை நூல் ஆகியவற்றை பொறுத்தவரையில், தரக் கட்டுப் பாட்டு ஆணைகள் கடந்த ஆண்டு  முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த ஆணைகளை மீறுவோருக்கு  முதல் முறை என்றால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது  ரூ.2 லட்சம் அபராதம். இரண்டா வது, அடுத்தடுத்த முறை குற்றத் துக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இந்த கட்டுப் பாட்டு ஆணை ஜவுளி உற்பத் தியை பாதிப்பதாகக் கூறுகின்ற னர் ஜவுளித் தொழில்முனை வோர்கள்.