districts

img

தனியார்மயத்துக்கு வாசல் திறப்பா? - சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 16 -  தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து அரசு வழித்தடங்க ளில் இயக்கி தனியார் மயத்திற்கு வழி வகுக்கும் தமிழ்நாடு அரசை கண் டித்து, காங்கேயத்தில் சிஐடியூ அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் அரசுப் பேருந்து பணி மனை முன்பு புதனன்று சிஐடியூ சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனி யார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு வழித்தடங்களில் இயங் குவதைக் கண்டித்தும், 5 ஆண்டுகள் கடந்தும் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்காமல் காலம் கடத்துவதையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் டி.ஏ.  உயர்வு வழங்க கோரியும், 2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்தவும், சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு   செய்யவும், ஓய்வு பெறும் தொழிலா ளர்களை வெறும் கையுடன் வீட் டிற்கு அனுப்பாமல் பணி ஓய்வு பெறும்  நாளன்று அனைத்து பணப்பயன்களை யும் வழங்கிட வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. சங்கத்தின் கிளைத் தலை வர் விஸ்வநாதன் தலைமை ஏற்றார். மத்திய சங்க நிர்வாகி நடராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அர்ஜுனன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், மத்திய சங்க நிர்வாகி வின் சென்ட் நன்றி கூறினார்.