சேலம், பிப்.7- வாக்குறுதியை மீறி, விளை நிலங்கள் அருகே குப்பைகளை கொட்ட வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்க கிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகமரமா கும் குப்பைகளை, குறுக்குப்பாறையனூரில் கொட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் குப் பைக்கொட்ட வரும் வாகனங்களை சிறைப் பிடித்தல், கோட்டாட்சியர் அலுவலகம் முற் றுகை போன்ற தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். கடந்த ஜன.31 ஆம் தேதி யன்று அரசிராமணி பேரூராட்சி அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர், பேரூ ராட்சி உயர் அலுவலர்கள், வருவாய்த்துறை என சம்மந்தப்பட்ட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளுடன், மாற்று இடத்தில் குப்பை களை கொட்டுவது குறித்து ஆலோசித்து வரு கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலை யில், வியாழனன்று மீண்டும் குறுக்குப்பாறை யனூரில் குப்பையைக் கொட்ட வந்த பேரூ ராட்சி வாகனங்களை விவசாயிகளும், பொது மக்களும் தடுத்து நிறுத்தினர். மேலும், போராட் டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டத் தலைவர் ராஜேந்திரன், நிர் வாகிகள் கே.பி.ராமசாமி, பிஎஸ்.சுப்ரமணி, பி.பழனிசாமி, பி.வளர்மதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்த னர். இச்செயலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.