தருமபுரி, பிப்.7- மக்கள் விரோத ஒன்றிய அரசின் பட்ஜெட் டைக் கண்டித்து, வெள்ளியன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டைக் கண்டித்து, விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, பொரு ளாளர் சிவா, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கட்சி சார் பில், அரூர் மற்றும் மொரப்பூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அரூரில் ஒன்றியச் செயலா ளர் பி.குமார், மொரப்பூரில் ஒன்றியச் செயலா ளர் கே.தங்கராசு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.