கோவை, பிப்.7- பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்ய வேண் டும் என்கிற கோரிக்கையை வலியு றுத்தி, கோவையில் வெள்ளியன்று முற்போக்கு, ஜனநாயக அமைப்பு களின் நிர்வாகிகள் பங்கேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவையின் முக்கிய அடையா ளங்களில் ஒன்றாக பேரூர் பட்டீஸ் வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படு வது வழக்கம். வரும் பிப்.10 ஆம் தேதி பேரூர் கோவிலில் குட முழுக்கு நடைபெற இருக்கின்றது. சைவ நெறிமுறைகளை பின்பற்றி வரும் இக்கோவிலில், குடமுழுக் கின் பொழுது வடமொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழ் மொழிக்கு கொடுக்கப்படு வது இல்லை என கூறப்படுகின் றது. குட முழுக்கின் போது வளர்க் கப்படும் யாக குண்டங்களில் வட மொழிக்கு இணையாக தமிழிலும் வழிபாடு நடத்த வேண்டும் என ஆன்மீகவாதிகள் வலியுறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கின் போது யாககுண்டங்க ளில் தமிழில் வழிபாடு நடத்த உத்தர விட வேண்டும் என சென்னை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலை யத்துறைக்கு அறிவுறுத்தியிருந் தது. இதுதொடர்பான விசார ணையை அடுத்து, தமிழில் வழிபாடு நடத்த அனுமதி கேட்கும் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல என்பதால் நிரா கரிக்கப்படுகிறது என எழுத்து பூர்வ மாக பதில் அளித்துள்ளது. இது பல் வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. தமிழகத்தின் பிரதான கோவி லில் குடமுழுக்கை தமிழில் நடத்த முடியாது எனச்சொல்வதை ஏற்க முடியாது என்றும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் இயக்கங்களை முன்னெ டுப்பது என ஜனநாயக, முற்போக்கு அமைப்பினர் முடிவெடுத்தனர். இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பேரூர் பட்டீஸ்வரர் கோவி லில், குடமுழுக்கு பெருவிழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி அனைத் துக் கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகள் பங் கேற்ற ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை ஏற்றார். இதில், சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவ சாமி, மாவட்டப் பொருளாளர் சி. தங்கவேலு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.ஜாகீர், வி. மணி, டி.தினேஷ்ராஜா, சி.ஜோதி மணி, டி.தங்கமணி, புரட்சிகர இளை ஞர் முன்னணி சார்பில் மலரவன், திராவிடத் தமிழர் கட்சியின் தலை வர், வழக்கறிஞர் வெண்மணி, திரா விட சுயமரியாதை இயக்கம் சார் பில் நேருதாஸ், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சுசி.கலையரசன், முருகன் சேனை அமைப்பின் சார் பில் சிவசாமி தமிழன் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.