districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் மனு

நாமக்கல், பிப்.7- பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகு திகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் நகர்மன்றத் தலைவர் செல்வராஜிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, 17 ஆவது வார்டுக்குட்பட்ட பாரதி யார் தெருவில் பொதுமக்களின் நீண்ட கால  கோரிக்கையான 30 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்ட சாக்கடை கால்வாயை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய சாக்கடை கால்வாய்  அமைத்து தர வேண்டும். அதேபோல, பழுத டைந்த நிலையில் காணப்படும் ஆரம்ப சுகா தார நிலைய கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு, புதிதாக அங்கன்வாடி பள்ளி அமைக்க வேண்டும். அங்கு போதிய பராம ரிப்பு இல்லாததால், விஷப்பூச்சிகள் நடமாட் டம் அதிகரித்துள்ளது. எனவே, இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்னி மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதி கம் நடைபெற்று, சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன போக்குவ ரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை  இருப்பதால் இது குறித்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று, நகர்மன்றத் தலைவர் செல்வராஜிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் லட்சுமணன், கிளைச் செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.