திருப்பூர், பிப். 7 - திருப்பூர் மாவட்டம் செங் கப்பள்ளி அருகே வியாழக் கிழமை பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் வெள்ளியன்று மூளைச்சாவு அடைந்தார். திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து வியாழக்கிழமை செங்கப்பள்ளி அருகே சாம்ராஜ்பா ளையம் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கல் லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். 37 பேர் காயம டைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஊமச்சி வலசு பகு தியைச் சேர்ந்த குருராஜ் என்ற மாணவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளி யன்று காலை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவ ரது பெற்றோர்கள் மாரிமுத்து, அனிதா ராணி ஆகியோர் தங்கள் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதன் அடிப்படையில் குருராஜின் கண்கள், இதயம், கிட்னி உள்ளிட்ட உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.