ஈரோடு, பிப்.7- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேர்தல் ஆணைய தக வல்களைப் பெறுவதில் தொடர்ந்து ஊடகங்களை மதிக்காத போக்குடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தை கண்டித்து வெள்ளியன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கருப்பு முகக்கவசம் அணிந்து ஊடக வியலாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட ஊடகவியலாளர்கள் கூறுகை யில், தேர்தல் நடத்தும் அலுவலரோ (மாநகராட்சி ஆணையர்), மாவட்ட தேர்தல் அலுவலரோ (மாவட்ட ஆட் சியர்), செய்தி மக்கள் தொடர்பு அலு வலரோ நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காத நிலை உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு குறித்த தகவல்களை தருவதிலும் இந்த அலட்சியம் தொடர்ந்தது. இந்த அலட் சியப் போக்கு, 8- தேதி நடக்கவுள்ள வாக்கு எண்ணும் பணியின் போதும் தொடரவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய ஜனநாயக விரோதப்போக்கை, கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன் கரா, பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கோரிக்கையை கேட்டறிந்தார். பின் னர், தேர்தல் ஆணையத்தின் விதிப் படி தான் அனைத்தும் நடைபெறுகி றது. விபரங்கள் அனைத்தும், இந் திய தேர்தல் ஆணையம் தான் அறி விக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகளைக் காண் போம் என்று சமாதானப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஈரோடு ஊடகவியலாளர்கள் போராட் டத்திற்கு கோயம்புத்தூர் பத்திரிகை யாளர் மன்றம் ஆதரவு தெரிவித்திருந் தது குறிப்பிடத்தக்கது.