ஈரோடு, பிப்.7- தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க ஈரோட்டில் இருந்து ரயில் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் பென்சனை ஒன்றிய அரசு சட்ட உரிமையாக ஆக்க வேண்டும், மாற்றுத்திறனாளி கள் நலனுக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் 10ஆம் தேதி தில்லியில் மாற்றுத்திறனாளி களின் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள் ளது. இதில், நாடு முழுவதும் இருந்து மாற்றுத்திற னாளிகள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்திலிருந்து 20 ஆண்கள், 17 பெண்கள் ஆக மொத்தம் 37 பேர் வெள்ளியன்று ஈரோடு ரயில் நிலையத் திலிருந்து, மாவட்ட நிர்வாகிகள் வீ.ராஜு, டி.சுப்பிர மணி, எஸ்.ரேணுகா, எஸ்.ரமேஷ், ஏ.பி.ராஜு ஆகியோர் தலைமையில் புறப்பட்டனர். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ப.மாரிமுத்து, மூத்த தலைவர் கே.துரைராஜ், ஒளி ரும் ஈரோடு கே.கே.எஸ்.கே. ரஃபீக், நுகர்வோர் பாது காப்பு மையத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், கருடா ஹோம்ஸ் எம்.ரவிச்சந்தி ரன், தொழிற்சங்கத் தலைவர்கள் சி.முருகேசன், பி.கனக ராஜ், மற்றும் பிஜு ஆகியோர் உற்சாகப்படுத்தி வழிய னுப்பி வைத்தனர்.