உடுமலை, ஜன.10- சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் மருத்துவ தேவைகளுக்காக நோயாளி களை இன்றும் தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம் உடுமலை பகுதியில் தொடர்கிறது. உடுமலை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்பு கள் உள்ளன. இந்த குடியிருப்புக ளுக்கு மலை அடிவார பகுதியில் இருந்து செல்ல காட்டுப்பகுதி யில் இருக்கும் ஒற்றை அடி பாதை யில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள் தங்கள் அடிப் படை தேவைகள், குழந்தைக ளின் கல்வி உள்ளிட்டவைக ளுக்கு நடந்து செல்ல வேண்டும். இப்படி தங்களின் அடிப்படை தேவைகளுக்கு என்று மலை வாழ் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு உடுமலை வன அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத் தினர். இந்த போராட்டத்தின் விளை வாக திருமூர்த்தி மலைப்பகுதியில் இருந்து குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனக்குழு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி நிர் வாகத்தின் சார்பில் திருமூர்த்தி மலைப்பகுதியில் இருந்து குரும லைக்கு சாலை அமைக்க சுமார் 44 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப் பட்டு சாலை போட சென்றவர் களை வனத்துறை தடுத்த கார ணத்தால் சாலை அமைக்கும் வேலை தடைபட்டுள்ளது. இந்நிலையில், தளி பேரூராட் சிக்குட்பட்ட குருமலை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகு தியை சேர்ந்த பழனிசாமி என்பவ ரின் மகன் சரவணன் (30) வியாழ னன்று மளிகை பொருட்கள் வாங்க மலை அடிவார பகுதி யான திருமூர்த்தி மலைக்கு சென் றுள்ளார். பொருட்கள் வாங்கி விட்டு திரும்ப வரும்போது, கருஞ்சோலை வனப்பகுதியில் பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்த சரவணன் உடல்நிலை சரி யில்லாத நிலையில், சிகிச்சை பெற உடுமலை அரசு மருத்துவம னைக்கு வர மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான குரு மலையில் இருந்து மலை அடி வார பகுதியான திருமூர்த்தி மலைக்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தார்கள். பின்னர் திருமூர்த்தி மலையில் இருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெறப்பட்டு, மேல் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலைவாழ் மக் கள் கூறுகையில் மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என்று வன உரிமைக்குழு, மாவட்ட ஆட்சியர், வனத்துறை ஏற்றுக் கொண்டபடி சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தளி பேரூ ராட்சி நிர்வாகத்தின் சார்பில் திரு மூர்த்திமலை முதல் குருமலை வரை டெண்டர் படி சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட் டுக்கு வந்து இருந்தால் புத னன்று திருமூர்த்தி மலைக்கு வர சுமார் நான்கு மணி நேரம் தொட் டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என்ற னர். மலைவாழ் மக்கள் குடியி ருப்பு பகுதிகளில் அடிப்படை வச திகள் இல்லாமல் இருந்தது. இச்சூழலில், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நடத்திய பல போராட்டங்களின் விளைவாக உள்ளாட்சி தேர்தலில் சில குடி யிருப்பு மக்களுக்கு மட்டும் வாக் குரிமை கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் வீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அன்றாட தேவைகள் முழுமையாக கிடைக்கவில்லை என்பதற்கு இந்த நவீன உல கில் மருத்துவ தேவைக்கு தொட் டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலையே சாட்சியாக உள்ளது.