தருமபுரி, ஜன.23- எர்ரனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட் சிக்குட்பட்ட ரெட்டியூர் கிராமத்தில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வரு கின்றனர். இங்குள்ள மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சரியான குடிநீர் மற் றும் கழிவுநீர் வசதியின்றி தவித்து வரு கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இக்கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க, மேல் நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து, அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் இணைப்பு கொடுத்து, ஒகே னக்கல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்ட செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்து, சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.கலா வதி, வட்டக்குழு உறுப்பினர்கள் பி. ஜெயராமன், பி.கோவிந்தசாமி, ஏ. சேகர், என்.வரதராஜன், ஜி. பாண்டியம்மாள், பி.முருகன், சி.ராஜா, வி.உதயகுமார், கே.எம்.முருகேசன், அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.