கோவை செட்டிப்பாளையம் எல் அண்ட் டி புறவழி சாலையில் உள்ள மைதானத்தில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவங்கி வைத்தார்.
கோவையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 திற்கும் மேற்பட்ட காளைகள், 900 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா பரிசோதனைகள் முடிந்து சான்றிதழ் வைத்திருக்கும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த மாடுகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது.முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 12 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது
இலவச உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாடுகளுக்கு சிகிச்சி அளிக்க கால் நடைத்துறையின் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன. காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.