சென்னை, ஜன.12
6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சிவகங்கையில் 1 இடத்திலும், வேலூரில் 25 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் 3 இடங்களிலும், திருப்பத்தூரில் 13 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.