கோபி. மே 16- தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் இருப்பு வைத்திருந்த மஞ்சள் மூட்டை களை இல்லையென கூறியதால் விவசாயி ஒருவர் தனது இணை யருடன் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடிவேரி பகு தியைச் சேர்ந்தவர் வெள்ளியங் கிரி, விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் மஞ்சள் சாகுபடியில் அறுவடை செய்த மஞ்சளை கடந்த 2019 ஆம் ஆண்டு 139 மஞ்சள் மூட்டைகளை கொடிவேரி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் இருப்பு வைத் திருந்துள்ளார். தற்போது இந்த ஆண்டு மஞ்சள் விற்பனை ஈரோடு மாவட்டத்தில் அதிக விற்பனை விலைக்கு செல்வதால் மஞ்சள் இருப்பு வைத்ததை எடுத்து விற் பனை செய்வதற்காக வெள்ளியங் கிரி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றுள்ளார். பின்னர், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நடராஜ னிடம் கேட்டுள்ளார். அப்போது கூட் டுறவு கடன் சங்க செயலாளர் நட ராஜன் உங்கள் பெயரில் மஞ்சள் மூட்டைகள் இருப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த விவசாயி இது குறித்து கணக்கு கேட்கவே கடந்த 2019 முதல் கூட் டுறவு கடன் சங்க செயலாளர் நட ராஜன் வெள்ளியங்கிரி இருப்பு வைத்த மஞ்சள் மூட்டைகளை நடராஜன் அவரது உறவினர்கள் பிரபு, மோகன் உள்ளிட்ட நபர்கள் மீது கணக்கு காட்டி கடன் பெற்று செலவு செய்தது தெரிய வந்தன. இதுகுறித்து காவல்துறையிடம் பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், வியாழனன்று வெள்ளியங்கிரி மற்றும் அவரது மனைவி அஞ்சலிதேவி இருவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் மூட்டைகளை இல்லையென கூறி யதால் மனமுடைந்த விவசாயி தனது மனைவியுடன் கேனில் கொண்டு வந்த டீசலை இருவரும் உடல் முழுவதும் ஊற்றி தற்கொ லைக்கு முயன்றனர். அப்போது, அருகில் இருந்தவர்கள் தற் கொலை முயற்சியை நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கடத்தூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி நடராஜன் மற்றும் வெள்ளிங்கிரி ஆகிய இருவரை யும் காவல் நிலையம் அழைத் துச் சென்று விசாரணை மேற் கொண்டுள்ளனர். அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மஞ்சள் மூட்டைகளை காணவில்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.