districts

img

அரசியல் சட்டத்தைக் காக்க வழக்கறிஞர் சங்கம் வலுப்பட வேண்டும்

திருப்பூர், டிச.20 - அரசியல் சட்டத்தின் மீதான தாக்கு தல்கள் அதிகரித்திருக்கும் அசாதார ணமான சூழ்நிலையில், அதை காப்பாற் றுவதற்கு அகில இந்திய வழக்கறிஞர்  சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அதன் மாநில பொதுச் செயலாளர்  எஸ்.சிவக்குமார் கூறினார். திருப்பூரில் சனியன்று அகில இந் திய வழக்கறிஞர் சங்கத்தின் ஐந்தாவது  மாவட்ட மாநாடு நடைபெற்றது. இம்மா நாட்டில் புதிய நிர்வாகிகளை அறிமுகம்  செய்து நிறைவுரை ஆற்றிய எஸ்.சிவக் குமார் கூறியதாவது: 1975 ஆம் ஆண்டு அவசரநிலை கால கட்டத்தை தொடர்ந்து, சாதாரண மக்க ளுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ் ணய்யர், எச்.ஆர்.கண்ணா உள்பட 400  வழக்கறிஞர்களால் 1983 ஆம் ஆண்டு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று அசாதாரண சூழ் நிலை நிலவுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பல்வேறு தாக்குதல் கள் தொடுக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றம், நாடாளுமன்றம், சட்டமன்றம்  என ஜனநாயக ரீதியாக தனித்து அதிகா ரத்துடன் செயல்படும் அமைப்புகள் ஆட்சியாளர்களால் தாக்குதலுக்கு உள் ளாக்கப்படுகின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொன் னவர்கள், யார் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என அவசர கோலத் தில் எஸ்.ஐ.ஆர்-ஐ அமலாக்கி, லட்சக்க ணக்கானோரை நீக்கியுள்ளனர். நாம்  பெற்றிருக்கும் அரசியல் சுதந்திரம், நம்  மக்களுக்கு சமூக விடுதலையை பெற் றுத் தரும் என்று அம்பேத்கர் நம்பிக்கை  தெரிவித்தார். ஆனால் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள் ளது. ஆளுநர்களுக்கு சட்ட மசோதா விற்கு கையெழுத்திட கால நிர்ணயம் செய்யாதது, தொழிலாளர் சட்டத் தொகுப்பு நடைமுறைப்படுத்தி இருப் பது என அரசியல் சட்ட கோட்பாடுகளின்  மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் அரசியல் சட் டத்தை காப்பதற்கு, அதன் மீதான தாக்கு தலை எதிர்கொள்ள வேண்டும்.  பெண் வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் அடிப்படை கோரிக்கைகள், நீதிமன்றங் களில் அடிப்படை கோரிக்கைகள் மீது வழக்கறிஞர் சங்கம் செயல்திட்டம் உரு வாக்கி செயல்பட வேண்டும். தனியார்  சட்டக் கல்லூரிகளில் அதிக கட்டணம்  வசூலிப்பது, பாடத்திட்ட வேறுபாடு ஆகியவை சட்டம் பயிலும் மாணவர் களை பாதிக்கின்றன. இதுபோன்ற பிரச் சனைகளில் வழக்கறிஞர் சங்கம் கவ னம் செலுத்த வேண்டும். வலுவான அமைப்பாக அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.