திருப்பூர், ஜன.10- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வெள்ளியன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப் பட்டது. சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் சமுத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் தமிழர்க ளின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து கோலப்போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜன.20 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். அதேபோல் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வியாழனன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.