districts

img

தேங்கிய நீரில் நாற்று நடும் போராட்டம்

சேலம், டிச.22- சாலையை சீரமைக்க வலியுறுத்தி, தேங்கிய நீரில் பெண் கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஒன்றியம், கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி, 3 ஆவது வார்டுக்குட்பட்ட சத்யா நகர் பகுதியிலுள்ள சாலை கள், கழிவுநீர் கால்வாய்கள் கடுமையாக சேதமடைந் துள்ளன. அவற்றை சரி செய்து புதிதாக சாலை மற்றும்  கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும், என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனைக் கண்டித்து கொண்டப்ப நாயக்கன் பட்டி ஊராட்சி 3 ஆவது வார்டு கவுன்சிலர் சுலோச்சனா சுசீந்திரன் தலைமையில், அப்பகுதி பெண்கள் சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீர்படுத்தித்தர வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.