districts

img

அரசு இ.சேவை மையம் அமைக்க கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.24- திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அரசு மருத்துவமனை பணியை துரிதப்படுத்த வேண்டும். சமயபுரத்தில் அரசு இ.சேவை மையம் அமைக்க வேண்டும். எஸ்.கள்ளுக் குடி பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும். பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து முடித்து சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண் ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் எஸ்.கள்ளுக்குடி கிளை சார்பில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலக முற் றுகை போராட்டம் வெள்ளியன்று நடை பெற்றது.  போரட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ். இந்துராஜ், ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ராமசாமி, சிவக்குமார், நாராயணசாமி உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.