சென்னை, ஏப். 29-தமிழகம் முழுவதும் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்களன்று(ஏப்.29) வெளியானது. இதில் மதிப்பெண் கள் குறைவு, தேர்ச்சி பெறாதது ஆகிய காரணங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாவதைத் தவிர்க்க ஆலோசனைகள் வழங்குவதற்காக 104 என்ற தொலைப் பேசி சேவை மையம் சென்னை டி.எம்.எஸ்.சில் செயல் பாட்டிற்கு வந்துள்ளது.இந்த மையமானது 24 மணி நேரமும் இயங்கக் கூடியது. மாணவர்களின் குழப் பங்கள் மற்றும் மன உளைச் சலைத் தீர்க்க மன நல ஆலோசகர்கள் தயார் நிலையில் உள்ளனர். மதிப்பெண் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி பெற்றோர் தங் கள் பிள்ளைகளின் தன்னம் பிக்கையை சிதைக்கக் கூடாது.