சேலம், அக்.4- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று கூலி உயர்வு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பயிர் நடவுக் கூலி, நடப்புக் கூலியை விட 25 சதம் உயர்த்தி வழங்கிடவும், வயல் வரப்பு வெட்டும் கூலி 25 சதம் வழங்கிடவும் சங்ககிரி எடப்பாடி தாலுகாவில் ஒக்கிலிப் பட்டி, கொட்டாயூர், கல்வெடங்கம், கள்ளன் சூர், நல்லாயூர், காவேரிப்பட்டி, பூலாம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் துரைசாமி, சேலம் மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே சேகர் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.