districts

img

அமித்ஷா-விற்கு எதிராக முழக்கம்

சேலம், டிச.31- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக் கிய மாமேதை டாக்டர் அம்பேத்கரை, நாடா ளுமன்றத்தில் அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சேலம் கோட்டை மைதா னத்தில், இடதுசாரி கட்சிகள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, சிபிஐ  மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஐ  (எம்-எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர்  ஆர்.வேல்முருகன் மற்றும் இடதுசாரி கட்சி களின் மாவட்ட, இடைக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சேலம்  மாவட்டம், ஆத்தூர் அரசு கல்லூரி கிளை சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாணவர் சங்க கிளை நிர்வாகி பெரியசாமி தலைமை வகித்தார். இதில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் அருண்குமார் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.