districts

img

அபாயத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்

கோவை, டிச. 20- கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகே, சாக்கடை கால்வாய் மூடப்படாமல் பாதசாரிகள் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது.  கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் பேருந்து நிலையம் உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நடைபாதையின் நடுவில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்காததன் காரணமாக, சாக்கடை கழிவு நீர் தெருவில் வழிந்தோடி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய் மூடப்படாததால், திறந்த நிலையில் உள்ளதால், அதில் பாதசாரிகள் குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்து, திறந்த நிலையில் உள்ள கால்வாய்க்கு மூடிகளை போட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.