districts

img

‘அரசியல் சாசனம் ஒரு வாழும் ஆவணம்’ கருத்தரங்கம்

சேலம், பிப்.2- இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் சார்பில், ‘அரசியல் சாசனம் ஒரு வாழும் ஆவணம்’ என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில், ‘அர சியல் சாசனம் ஒரு வாழும் ஆவ ணம்’ என்ற தலைப்பில் கருத்தரங் கம், சேலம் எல்ஐசி சுனில் மைத்ரா நினைவரங்கத்தில் சனியன்று நடை பெற்றது. காப்பீடு கழக ஊழியர் சங் கம் சேலம் கோட்டத் தலைவர் நர சிம்மன் தலைமை வகித்தார். கோவை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் கருப் பையா வரவேற்றார். சிஐடியு சேலம் உருக்காலை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ் வாழ்த்திப் பேசி னார். அரசியல் சாசனம் பாதுகாக் கப்பட வேண்டும் என்ற தீர்மா னத்தை, வங்கி ஊழியர் சங்க  துணைத்தலைவர் எஸ்.ஏ.ராஜேந்தி ரன் முன்மொழிந்தார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன நிர்வாகி நேதாஜி சுபாஷ் வழிமொழிந்தார். பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கருத்துரை யாற்றினார். அவர் தனது உரை யில் ஜனநாயகத்தை காப்பதில் அரசியல் சாசனத்தின் பங்கு. அதை மக்களை உணரச் செய்ய தொழிற்சங்க தோழர்கள் ஆற்ற வேண்டிய கடமை, அரசியல் சாச னத்தின் உள்ளடக்கம், அதன் மாண் புகள் குறித்து தெரிவித்தார். மேலும், நம்பிக்கை கொண்டு அரசி யல் சாசனத்தை பாதுகாக்க முன் னேற வேண்டும், என அறைகூவல் விடுத்தார். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்ட வரலாறு நம்பிக்கை அளிக்கும். அந்த நம்பிக்கை கொண்ட போராட் டம் தான் இன்று வரை பொதுத் துறை எல்ஐசி-யை பாதுகாத்து வரு கிறது. ஆகவே அதை போல் நம் பிக்கை கொண்டு அரசியல் சாச னத்தை பாதுகாக்க தயாராக வேண் டும், என்றார். முடிவில், அரசு ஊழி யர் சங்க நிர்வாகி சங்கர் நன்றி கூறினார். அகில இந்திய பென்சன் தாரர் சங்க பொருளாளர் ரவீந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.