நாமக்கல், அக்.7- மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட, திருச் செங்கோடு நகர 8 ஆவது மாநாட்டில் நகரக்குழு செய லாளராக எஸ்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு நகர எட்டாவது மாநாடு கட்சி அலுவல கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு ஆர்.நடேசன், எம்.வசந்தி, எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் கொடியினை மூத்த தோழர் எஸ்.ஏ.ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். ஆர்.நடேசன் வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை எஸ்.சீனிவாசன் முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உரையாற்றினார். வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை கட்சியின் நகரச் செயலாளர் ஐ.ராயப்பன் முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் உரை யாற்றினார். இதில், திருச்செங்கோடு அரசு மருத்து வமனையின் கட்டிட கட்டுமானப் பணி களை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருச்செங் கோடு நகரம் முழுவதும் காவிரி ஆற்று குடிநீர் வழங்கி வரும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய்க ளில் ஏற்படும் அடைப்ப களை தண்ணீர் வீணாகா மல் விரைந்து முடிக்க வேண்டும். திருச்செங் கோடு நகரப்போக்கு வரத்து நெரிசலை குறைத் திடும் வகையில் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட் டிற்கு சீதாராம்பாளையம், கருவேப்பம் பட்டி, செப்பாறை, லச்சிநகர் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பேருந்து வழித்தடமும், சாக்கடை வசதியும் அமைத்துக் கொடுத்திட வேண்டும உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஒன்பது பேர் கொண்ட நகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. நகரக் குழு செய லாளராக எஸ்.சீனிவாசன் தேர்வு செய்யப் பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயமணி உரை யாற்றினார். முடிவில், எம் வசந்தி நன்றி கூறினார்.