districts

img

கவுந்தப்பாடி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு, ஜன.10- கவுந்தபாடி ஊராட்சியை நக ராட்சியாக மாற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவது, இணைப்பது உள்ளிட்ட  மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் நட வடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு  எழுந்து வருகிறது. இதன்ஒருபகுதி யாக, ஈரோடு மாவட்டம், கவுந்தப் பாடி கிராம ஊராட்சியை நகராட்சி யாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஆட்சேபணை கடிதம் அனுப் பப்பட்டது. அதன்படி, கவுந்தப்பாடி கிராமத்தில் வசித்து வரும் விவ சாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இணைந்து வேலை செய்து வருகிறேன். மேற்படி வேலையை நம்பித்தான் மொத்த  குடும்பமும் இருக்கிறது. இந்நிலை யில் கிராம ஊராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்துவதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். மேலும், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட உதவிகள் கிடைக்காது. சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வையும் கூடுதலாக உயரும். விவ சாயத் தொழிலாளியான தாங்கள் கூடுதல் வரி செலுத்த இயலாது. ஆகவே, கவுந்தப்பாடி ஊராட்சி கிராம ஊராட்சியாகவே நீடிக்க வேண்டும். நகராட்சியாகவோ, பேரூராட்சியாகவோ மாற்றக் கூடாது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறையின் முதன்மை  செயலாளருக்கு பெருந்திரளான விவசாயத் தொழிலாளர்கள் கவுந் தப்பாடி அஞ்சலகத்திலிருந்து ஆட் சேபணை கடிதங்களை அனுப்பி வைத்தனர்.  கோபி  இதேபோன்று, ஈரோடு மாவட் டம், பவானி உள்ளிட்ட நகராட்சிக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட் சிகளை நகராட்சியுடன் இணைப் பதற்கான அறிவிப்பினை எதிர்த்து,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கோபி சார் ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.  பொள்ளாச்சி கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி மற்றும் சங்கம்பாளையம் கிரா மத்தை பொள்ளாச்சி நகராட்சி யோடு இணைப்பதை மறுபரிசீ லனை  செய்து விடுவிக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். இதில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆச்சி பட்டி கிளைச் செயலாளர் எஸ். மாதீஸ்வரன், தாலுகா குழு உறுப் பினர் ஸ்டாலின் பழனிச்சாமி உள் ளிட்ட திரளனோர் பங்கேற்றனர்.