பொங்கல் தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
உதகை, ஜன.3- நீலகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க, வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளியன்று தொடங்கி யது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.14 ஆம் தேதியன்று கொண்டாடப்பட வுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவ தும் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக் கன்கள் ஜன.3 ஆம் தேதி முதல் வழங்க வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் படி வெள்ளியன்று முதல் ரேசன் கடை ஊழி யர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் செய்ய துவங்கியுள்ளனர். நீல கிரி மாவட்டத்திலும் வெள்ளியன்று காலை முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதி காரிகள் கூறுகையில், நீலகிரியில் 413 கடை கள் உள்ளன. இதில் 2,18,208 அரிசி பெற தகுதியான ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த டோக் கன்களில் பரிசுத் தொகுப்பை பெறுவதற் கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, தங்களுக்கு குறிப் பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பரிசு தொகுப்பைப் பெற்று கொள்ளலாம். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங் கும் வகையில் டோக்கன் விநியோகம் செய் யப்படும். டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஜன.8 ஆம் தேதி வரை நடைபெறும். எந்தவித புகார்களுக்கும் இடமில்லாமல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும். டோக் கன் வாங்க முடியாதவர்கள் குறிப்பிட்ட தேதி யில் நேரில் வந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொங்கலை முன் னிட்டு இலவச வேட்டி, சேலைகள் அனைத் தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட் டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளன. இவற்றையும் சேர்த்து வழங்க தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.
ரயில் பயணிகள் போராட்டம்
பொள்ளாச்சி, ஜன.3- கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலை யத்தை, ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து வஞ்சித்து வரு கிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு முன்பதிவு மையத்தை மூடியது. மக்கள் கருத்தை கேட்காமல் தன் னிச்சையாக ரயில்வே நிர்வா கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதனன்று பொள்ளாச்சி ரயில் நிலை யத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 06420 காலை 07.25க்கு பதிலாக 8 மணிக்கு புறப்படும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து ரயில் பயணிகள் பொள்ளாச்சி ரயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டு, என்ஜின் முன்பு நின்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.
கணியாம் பூண்டி, நாச்சிபாளையம் ஊராட்சிகளை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு
திருப்பூர், ஜன. 3 - திருப்பூர் மாநகராட்சியுடன், கிழக்குப் பகு தியில் உள்ள நாச்சிபாளையம் ஊராட்சி, மேற்குப் பகுதியில் உள்ள கணியாம்பூண்டி ஊராட்சி ஆகியவற்றை இணைப்பதற்கு முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. பின்னலாடைத் தொழில் நகரமான திருப் பூர், வேகமான விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நல்லூர், 15 வேலம்பாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகளும், இந்த நக ரத்தைச் சுற்றி இருந்த செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம், தொ. மண்ணரை, முத்தணம்பாளையம், வீர பாண்டி, இடுவம்பாளையம், பெரியாண்டிபா ளையம் ஆகிய எட்டு ஊராட்சிகளும் இணைக் கப்பட்டன. மாநகராட்சியாக வார்டு மறு வரை யறை செய்யப்பட்டு மொத்தம் 60 வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆன நிலையில், மென்மேலும் நக ரமயமாதல் அதிகரிப்பது, சுற்றி வட்டார ஊராட்சிகளின் மக்கள் தொகை, குடியிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகி யவற்றையும் கருத்தில் கொண்டு, மேலும் பல ஊராட்சிகள் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நகராட்சிகள் நிர்வாகத்துறை அறிவுறுத் தல் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள் பற்றி கருத்துரு அனுப்பி இருந் தார். இந்த தகவல் பரவிய நிலையில் பல ஊராட்சி மன்றங்களிலும் மாநராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபைக் கூட்டங்களிலும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட் டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தமிழகம் முழுவ தும் 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய் வது என்று உத்தேச முடிவு செய்திருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளார். இதில் திருப் பூர் மாநகராட்சியுடன், பொங்கலூர் ஒன்றியத் துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சி யையும், அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியாம்பூண்டி ஊராட்சியையும் இணைத்து விரிவாக்கம் செய்வது என்று முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மங்கலம், இடுவாய், முதலி பாளையம், கணக்கம்பாளையம், பெருமா நல்லூர், காளிபாளையம், அ.பெரியாபாளை யம், ச.பெரியபாளையம் உள்ளிட்ட ஊராட்சி கள் இணைக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால் தற்போதைய அரசா ணையில் மேற்கண்ட ஊராட்சிகள் இடம் பெற வில்லை. மாறாக திருப்பூரின் கிழக்குப் பகு தியில் நாச்சிபாளையம், மேற்குப் பகுதியில் கணியாம்பூண்டி ஆகிய இரண்டு ஊராட்சி கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் வரும் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மேற்கண்ட நாச்சிபா ளையம், கணியாம்பூண்டி ஊராட்சிகள் மாநக ராட்சியுடன் இணைக்கப்படுவதால் வார்டு மறு வரையறை செய்து தேர்தல் நடத்தப்ப டும். மற்ற ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவ டையும் நிலையில் தனி அதிகாரிகளின் நிர்வா கத்தில் செயல்படும். பிற ஊராட்சிகள் மாநக ராட்சியுடன் இணைக்கப்படாததால், ஏற்கெ னவே இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அப்பகுதி மக்கள் இணைக்கப்படா ததற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர். எனி னும் தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக் கக்கூடிய ஊராட்சிகளுக்கு விரைவில் தேர் தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்து கின்றனர்.
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தருமபுரி, ஜன.3- பாலக்கோடு அருகே உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலி ருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெள்ளி யன்று தண்ணீரை திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024 - 25 (பசலி 1434) ஆம் ஆண்டிற்கு, பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜன.3 முதல் மே 22 ஆம் தேதி வரை 140 நாட்களுக்கு மொத்தம் 395.33 மி.கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெள்ளியன்று பாச னத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக் கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். சின்னாறு நீர்த்தேக்கம் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டி அள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளார அள்ளி ஆகிய 13 கிராமங்கள் பாசன வசதி பயன்பெறும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவர்.வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைகுந்தாவில் 0 டிகிரி, அவலாஞ்சியில் மைனஸ் 2 டிகிரி
உதகை, ஜன.3- நீலகிரியில் உறைபனி பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வெள் ளியன்று தலைகுந்தாவில் குறைந்த பட்சமாக 0 டிகிரி செல்சியஸ் மற்றும் அவலாஞ்சியில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜன வரி ஆகிய 3 மாத காலங்கள் குளிர் கால சீசன் ஆகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற் றம் காரணமாக மழை மற்றும் பனிப் பொழிவு தாமதமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நடப்பு சீசனில் மழை தொடர்ந்து பெய்ததால், குளிர் கால சீசன் தள்ளிப்போன நிலை யில், தற்போது தொடங்கியுள்ளது. டிசம்பரில் ஓரிரு நாட்களில் மட் டுமே உறைபனி காணப்பட்டது. தொடர்ந்து பனியின் தாக்கமின்றி கடந்த சில நாட்களாக இதமான காலநிலை நிலவி வந்தது. இந் நிலையில், உதகையில் வெள்ளி யன்று முதல் அதிகாலை வேளை யில் உறைபனி பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற் கேற்ப வியாழனன்று மாலை முதலே கடுங்குளிர் நிலவி வந்த நிலையில், வெள்ளியன்று காலை உதகை நகரில் லேசான உறை பனியும், சுற்றுவட்டார பகுதிகளான தலைக்குந்தா, காந்தல் பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. உதகை தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதி வானது. இதன் காரணமாக புல் வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல உறைபனி படிந்து, மினி காஷ்மீரை போல காட்சி அளித் தது. இதேபோல் அவலாஞ்சி பகுதி யில் குறைந்தபட்சமாக மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதி வானது. வரும் நாட்களில் தொடர்ச் சியாக உறைபனி அதிகம் இருக் கும் என்பதால், தேயிலை செடிகள் மற்றும் விவசாய பயிர்கள் கருக வாய்ப்புள்ளது. உதகையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டு, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கேரட் அறுவடைக்கு செல்லும் தொழி லாளர்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். மார்க்கெட் உள் ளிட்ட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அதேசமயம் உறைபனி காலநிலையை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் பலரும் உத கைக்கு ஆர்வமுடன் வருகின்ற னர்.