திருப்பூர், டிச.22– நொய்யல் ஆற்றில் திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் ஒரத்துப்பாளை யம் அணையின் நீர்பிடிப்பு பகுதி யில் 4,500 மரக்கன்றுகள் நடப்பட் டுள்ளன. நொய்யல் ஆற்று விவசாயி கள் பாசன வசதி பெறுவதற்காக, திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை யில் ஒரத்துப்பாளையம் அணை 1980 ஆம் ஆண்டுகளில் கட்டப் பட்டு, 1992 ஆம் ஆண்டு பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் திருப்பூர் சாய ஆலைகளின் கழிவுநீர் தேங்கி, சுற்றுவட்டார விளைநிலங்கள் கடு மையாக பாதிக்கப்பட்டன. பாசன வசதி மட்டுமின்றி, குடிநீர் ஆதார மும் விஷமாக மாறியது. இதை யடுத்து நொய்யல் பாசன விவசாயி கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தர வின்படி, ஒரத்துப்பாளையம் அணையில் இருந்த சாயக்கழிவு நீர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 20 ஆண்டு காலமாக ஒரத்துப் பாளையம் அணையில் தண்ணீர் தேக்கப்படுவதில்லை. ஆயிரம் ஏக் கர் பரப்பு கொண்ட இந்த ஒரத்துப் பாளையம் அணையில் முட்செடி கள் மட்டுமே இருந்து வந்தன. கடந்த 20 ஆண்டு காலம் தண்ணீர் தேக்கப் படாமல் பயன்பாடு இன்றி, அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் காலியாக உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில், “வனத்துக்குள் திருப் பூர்” அமைப்பு மற்றும் காங்கேயம் துளிகள் அமைப்பு இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மரம் வைப் பதற்கு ஏற்பாடுகள் செய்தன. எனி னும், அருகாமை சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளின் தலையீட் டால் மரம் நடும் நிகழ்வு நின்று போனது. கடந்த 4 மாதமாக விவசாயி கள் மற்றும் ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரி டமும் வனத்துக்குள் திருப்பூர் மற் றும் துளிகள் அமைப்பினர் கலந்து பேசி ஒரு இணக்கமான முடிவை ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் 45 ஏக்கரில் முதல் கட்டமாக 4500 மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் சுமார் 45 ஏக்கர் இடத்துக்கும் கம்பி வேலி போடப் பட்டுள்ளது. சூரிய மின் தகடுகள் மூலம் மின் இணைப்பு பெற்று 4500 மரங்களுக்கும் சொட்டுநீர் பாசன வசதி கிடைக்கும் வகையில், ரூ.30 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4500 மரங்களும், உள்ளூர் பறவைகள் மற்றும் வெளியூர் பறவைகள் வந்து தங்கவும், தங்களுக்கு தேவையான பழங்களை உண்ண வும், அதற்குண்டான நாட்டுப் பழ வகைகள் கொண்ட மரங்கள் மட் டுமே வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெகு விரைவில் ஒரத் துப்பாளையம் அணை ஒரு பறவை கள் சரணாலயமாக மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நொய் யல் ஆற்றின் மாசு பாட்டினை நீக்க திருப்பூர் சாயப் பட்டறைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை அமல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளன. தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் மாசுபாடு கலப்பது மிகப் பெரும் அளவு நின்று போனது. அதேசமயம் வெள்ளிங்கிரி மலையில் தொடங்கும் நொய்யல் ஆறு கோவை திருப்பூரை கடந்து வரும் பொழுது கழிவுநீர்கள் கலக் கக் கூடியதாகவும் உள்ளது. எனவே ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கக்கூடாது என்ற நீதி மன்ற உத்தரவு தொடர்வது அவசி யம். இந்த சூழ்நிலையில் ஒரத்துப் பாளையம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவு திருப்பூர் மாவட்டத்திற்குள் உள் ளது. 45 ஏக்கரில் இருந்து இந்த 600 ஏக்கர் வரை படிப்படியாக மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள் ளது என்று வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் தெரிவித்தனர்.