districts

img

சொத்து வரி உயர்வை கைவிடுக: மாநகராட்சி ஆணையரிடம் மனு

கோவை, ஜன.10- ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்விற்கான ஆணையை கோவை மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தக்கூடாது என  சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலைவர் கள் மாநகராட்சி ஆணையரை வியாழனன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளா ளர் ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் ஜேம்ஸ், நிர்வாகக்குழு உறுப்பினர் கள் வெங்காடச்சலம், கல்யாண சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர்  சந்திரன் ஆகியோர் மாநகராட்சி  ஆணையர் சிவகுருபிரபாகரனிடம் மனு அளித்தனர். அதில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு ஆண்டுக்கு 6 சதவீதம் என்பதை மாநகராட்சி மன்றம் முழு மையாக எதிர்த்த போதும், அம லாக்கம் செய்கிற பணியில் மாநக ராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது மக்கள் மத்தியில் மிகக் கடுமையான எதிர்ப்பையும்,  பாதிப்பையும் ஏற்படுத்தும். வணிக வளாகங்களில் கூட இவ்வாறான  நடைமுறை கையாளப்படுவ தில்லை.  இந்நிலையில், உள்ளாட்சி நிர் வாகம் சொத்து வரி உயர்வை இவ் வளவு நிர்ப்பந்தமாக தீர்மானிப் பதை கைவிட வேண்டும். மேலும், கடந்த சில மாதங்களாக ட்ரோன்  சர்வே நடைபெற்று வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகக் கடுமை யான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ட்ரோன் சர்வே முடிந்த பின்பு அதன்படி சொத்து வரி  கேட்பு மனு தயார் செய்யக்கூடாது.  நேரடியாக ஆய்வு செய்த பின்பே  சொத்து வரியை தீர்மானிக்க வேண்டும். அதேபோல் வணிகத் திற்கு பயன்படுத்துகின்ற போதும், தண்ணீரே தேவையில்லாத வணி கத்துக்கும் கூட குடிநீர் கட்டணம் வணிக கட்டணமாக தீர்மானிக்க கூடாது. இந்த பிரச்சனைகளில் மாந கராட்சி நிர்வாகம் சாதாரண மக்க ளிடம் உண்மையான நிலையை அறிந்து செயல்பட வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.