நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதிய பாக்கி குறித்து மனு
நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதிய பாக்கி குறித்து மனு கோவை, ஜன.10- நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒன்றரை மாதங்களாக ஊதியம் தரப்படாமல் உள்ள நிலையில், உடனே ஊதியத்தை வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்கு நரிடம் மனு அளித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்ட இயக்குனரி டம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலா ளர்களுக்கு ஒன்றரை மாதங்களுக்கு மேல் சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. பொங்கல் பண் டிகை வருவதால் தொழிலாளர்களுக்கு வர வேண்டிய சம்பளத்தை வழங்க உடனடியாக சிறப்பு கவனம் செலுத் திட வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தில் எதிர்வரும் மழைக் காலங்களில் ஊரணி குளம் குட்டைகள் நீர்வழிப் பாதை கள் ஆகியவற்றை தூர்வாரி பராமரிப்பதற்காக, செங் கல், பாண்டு வேலைகளை திட்டமிட்டு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும். கூடுதல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையும் வேலை நாட்களையும் அதிகப்படியான 100 நாள் வேலைத் திட்ட ஆட்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ரவிச்சந்திரன், ஆர்.செல்வராஜ் ஆகி யோர் உடன் கலந்து கொண்டனர்.
மேட்டூர் விவசாயிக்கு தேசிய விருது
மேட்டூர் விவசாயிக்கு தேசிய விருது சேலம், ஜன.10- மேச்சேரி இன செம்மறியாடுகளை அழியாமல் பாதுகாத்தமைக்கான தேசிய அளவிலான விருது, மேட்டூர் அருகே உள்ள தார்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள செம்மறியாட்டு இனங்களில் மேச்சேரி இன செம்மறியாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மேச்சேரி இன செம்மறியாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. சேலம், ஈரோடு, நாமக் கல், கரூர், தருமபுரி மாவட்டங்களில் இவ்வின ஆடுகள் பரவலாக காணப்படுகின்றன. இவ்வின ஆடுகளை அழி யாமல் பாதுகாக்கவும், இதில் புதிய ஆராய்ச்சிகள் மேற் கொண்டு இனத்தை மேம்படுத்தவும், தமிழ்நாடு கால் நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட் டுப்பாட்டில் பொட்டனேரியில் மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம் 1978 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. இங்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் மேச்சேரி இன செம்மறியாடுகளை மேம்படுத்த ‘மெகா ஆடுகள் விதைத் திட்டம்’ 2009 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மேட்டூரையடுத்த கொளத்தூர் தார்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் என்பவர், மெகா செம்மறியாடு விதைத் திட்டத்தின் பயனாளியாக இருந்து வருகிறார். சிறந்த முறையில் பண்ணையைப் பராமரித்து வந்ததால், தேசிய கால்நடை மரபணு வளங்களின் பணியகம் மூலமாக தனி நபர்களுக்கு வழங்கப்படும் ‘கால்நடை இனங்களை அழியாமல் பாதுகாத்தமைக்கான விருது’க்கு பாலன் தேர்வு செய் யப்பட்டார். இவரது செயல்பாடுகளுக்காக மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையத்தால் இவ்விருதுக்கு பரிந்து ரைக்கப்பட்டது. ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயி பாலனுக்கு விருது வழங்கப்பட் டது.
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி சேலம், ஜன.10- அயோத்தியாப்பட்டணம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (19), அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனி யார் கல்லூரியில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந் தார். இவர் வியாழனன்று காலை வழக்கம் போல இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றபோது, மாசிநா யக்கன்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறைபாடுடன் கார் விற்பனை: புதிய கார் வழங்க உத்தரவு
நாமக்கல், ஜன.10- உற்பத்தி குறைபாடுடன் விற்பனை செய்யப்பட்ட காரை மாற்றி புதிய காரை வழங்கவும், பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும், கார் உற்பத்தி நிறுவனத்திற்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஏ.ஜி.சரவணகுமார் (43). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.20,03,841/- செலுத்தி, நாமக்கல்லில் உள்ள கார் டீலரிடம் (தி ட்ரூ சாய் ஒர்க்ஸ்) புதிய டாடா நெக் ஸான் கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை வாங்கிய 26 நாட்களில் காரின் வெளிப்புறத்தில் பல இடங்களில் பெயிண்டிங் குறைபாடு தோன்றியுள் ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சர வணகுமார், கார் உற்பத்தி நிறுவனத் திற்கு மின்னஞ்சல் மூலம் புகாரளித் துள்ளார். குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அங்கு காரை ஒப்படைத்த ஒரு மாத காலத்திற்குப் பின்னரே, அவருக்கு திரும்ப கார் வழங்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில நாட்களில் காரின் வெளிப் புறத்தில் உள்ள பெயிண்டிங்கின் தோற் றம் மாறத் தொடங்கியுள்ளது. மீண்டும் காரை பழுது நீக்க சரவணகுமார் கொடுத்துள்ளார். குறைகளை முழுமையாக சரி செய் யாததால் அதிருப்தியடைந்த சரவண குமார், காரை எடுத்துக் கொள்ளாமல் புதிய கார் வேண்டும் என கார் உற்பத்தி யாளரிடம் தெரிவித்துள்ளர். ஆனால், அவரது வேண்டுகோளை ஏற்க கார் உற் பத்தி நிறுவனம் மறுத்துவிட்டது. இத னால் கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும், கார் விற்பனையாளர் மற்றும் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சரவண குமார் கடந்தாண்டு ஜூலை மாதம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசா ரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கினர். அதில் புதிய காரில் ஏற்பட்ட பெயிண் டிங் குறைபாடுகளை சரி செய்து விட்ட தாக சர்வீஸ் சென்டர் ஒப்புக் கொள்வ தன் மூலம், காரானது குறைபாடுகளு டன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காரின் இயந்திரத்தில் பழுது இருப்பதை மட் டுமே உற்பத்தி குறைபாடு என்று கூற இயலாது. ரூ.20 லட்சம் செலுத்தி காரை வாங்கியவர், குறைகளை சரி செய்து காரை இயக்க விரும்ப மாட்டார். அதனை அவர் விற்க நினைத்தாலும், பலமுறை பழுது பார்க்கும் மையத் துக்கு கார் சென்று வந்துள்ளதை இணை யதளத்தின் மூலம் வாங்குபவர்கள் கவ னிப்பார்கள். புதிய கார் என்பது மனிதர் களின் உணர்வுகளுடன் தொடர்பு கொண் டது. புதிதாக வாங்கும் போதே பழுது டன் கார் இருந்துள்ளதால் கார் உற்பத்தி நிறுவனமானது வழக்கு தாக்கல் செய்த வருக்கு எட்டு வார காலத்துக்குள் அதே வகை புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய பணத்தை, பணம் செலுத்தப் பட்ட நாளிலிருந்து வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவிகித வட் டியுடன் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டை கார் உற் பத்தி நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த வருக்கு வழங்க வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளின் சமத்துவப் பொங்கல்
கல்லூரி மாணவிகளின் சமத்துவப் பொங்கல் நாமக்கல், ஜன.10- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரி மாணவிகள், சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பொங்கல் விழா நிகழ்ச்சிகள், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்க ளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரியில், வெள்ளியன்று சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி விளையாட்டு அரங்கில் குழு குழுவாக இணைந்து பல்வேறு இடங்களில் பொங்கல் வைத்து, பாரம்பரிய கும்மி பாட்டு பாடல்களுக்கு கைத் தட்டி நடனங்கள் ஆடி மகிழ்ச்சி அடைந்தனர். இவ்விழா வில் கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வாகனத்தை கொடுத்த தந்தை சிறையில் அடைப்பு
திருப்பூர், ஜன. 10 - திருப்பூரில் 17 வயது சிறுவன் உரிமம் இல்லாமல் இருசக் கர வாகனத்தை ஓட்டி வந்து பெண்ணின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். உரிய வயதுக்கு முன்பாக வாகனத்தை இயக் கக் கொடுத்த அந்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஜெயலலிதா நகர். இங்கு மு.வீராள் (65) என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை 9 மணியளவில் அவரது மகன் குமாருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறு வன் ஓட்டுநர் உரிமம் இன்றி டிவிஎஸ் விஸ்டா என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து, வீராள் மீது மோதி விட்டார். இதில் படுகாயம் அடைந்த வீராளை திருப்பூர் அரசு மருத்துவமனை யில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய சிறுவனைப் பிடித்து வீரபாண்டி காவல் துறையினர் விசாரித்தனர். உரிய ஓட்டு நர் உரிமம் இல்லாத நிலையில், அவருக்கு இருசக்கர வாக னத்தை ஓட்டுவதற்கு வழங்கிய அவரது தந்தை ஆறுமுகம் என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சங்கப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பிளஸ் டூ மாணவி பொதுத்தேர்வு எழுத உத்தரவாதம்கருப்புத்துணி முக்காடு அணிந்து ஒப்பாரிப் போராட்டம்
திருப்பூர், ஜன.10 - பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வில் பிரெஞ்ச் மொழிப் பாடம் எழுதலாம் என உறுதி யளித்து மாணவியை பள்ளியில் சேர்த்து விட்டு, பின்னர் பொதுத்தேர்வு எழுத முடி யாது என கைவிட்ட தனியார் பள்ளியை, இந் திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிடு வதாக அறிவித்தனர். இதையடுத்து அப் பள்ளி நிர்வாகம், அந்த மாணவியை வேறொரு பள்ளியில் பிரெஞ்ச் உள்ளிட்ட பாடங்கள் அரசு பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்தது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பால சமுத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளியில் பிரெஞ்சு மொழி பொதுத்தேர்வு எழுதலாம் எனக் கூறி சீமாஸ்ரீ என்ற மாணவியை 12ஆம் வகுப்பில் சேர்த்த னர். மேலும், அவரிடம் ரூ.68 ஆயிரம் கட்ட ணம் வசூலித்து, அடையாள அட்டை மற்றும் பள்ளிச் சீருடை வழங்கினர். அதன்பின் பள் ளிக்கு சென்று வந்த சீமாஸ்ரீயிடம் பள்ளி நிர்வா கம், பிரெஞ்சு மொழி பாடத்திற்கு வேறு ஒரு டியூசன் சென்டருக்குச் சென்று படிக்குமா றும், பொதுத்தேர்வை பள்ளியிலேயே எழுத லாம் எனவும் கூறியுள்ளனர். ஆனால், பள்ளி வருகை பதிவேட்டில் மாணவியின் பெயரை நீக்கிவிட்டனர். இதையடுத்து கடந்த டிச.23 ஆம் தேதி சீமாஸ்ரீயிடம், பொருளாதார சிக்கல் காரணமாக வரும் மார்ச் மாதம் அரசு பள்ளி யில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும்படி அந்தப் பள்ளி நிர்வாகத்தி னர் கூறியுள்ளனர். இதைப் பற்றி சம்பந்தப் பட்ட மாணவி மற்றும் பெற்றோர், மாவட்ட ஆட்சியரகத்தில் விசாரித்தபோது, கால தாம தம் காரணமாக இந்த ஆண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுத முடியாது என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால் ஓராண்டு கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து மாணவி, குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்த னர். இதையடுத்து மாணவியின் பெற்றோர், இந்திய மாணவர் சங்கத்தினரை அணுகி னர். எனவே மாணவியின் ஓராண்டு கல்வி வாய்ப்பை பாழ்படுத்தும் தனியார் பள்ளி நிர் வாகத்தைக் கண்டித்தும், இம்மாணவியின் படிப்புக்கு உத்தரவாதம் செய்ய வலியுறுத்தி யும் இந்திய மாணவர் சங்கத்தினர், பாதிக்கப் பட்ட மாணவி, பெற்றோர்களுடன் ஜன.10 ஆம் தேதி வெள்ளியன்று விக்னேஸ்வரா பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறி வித்தனர். போராட்ட அறிவிப்பை அடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவர் சங்க மாவட் டத் தலைவர் கல்கிராஜ், மாவட்டச் செயலா ளர் பிரவீன்குமார், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், மாணவியின் பெற் றோர்களுடன் வெள்ளியன்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாணவியின் வருகை பதிவை கொண்டு மீண்டும் சேர்க்கை பதிவு செய்து, வேறொரு தனியார் பள்ளியில் மாணவி சீமாஸ்ரீ தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்வ தாக ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படை யில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி பிளாட்டோ அகாடமி பள்ளியில் மாண விக்கு சேர்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பிரெஞ்சு மொழிப்பாடம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் அரசு பொதுத் தேர்வு எழு தலாம் என தெரிவிக்கப்பட்டது.
நடை பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு
அவிநாசி, ஜன.10 அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பயிற்சி மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் தடை விதித்ததை தொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளா கத்தில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சில மாதங்களாக நடை பயிற்சி மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதைதொடர்ந்து நடைபயிற்சி மேற் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் நடைபயிற்சி மேற்கொள்ள உத்தர விட்டார். இருப்பினும் பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரி யர் கழகமும் நடை பயிற்சிக்கு அனுமதி மறுத்து வருகின்ற னர். இந்நிலையில், அவிநாசி வழக்கறிஞர் சங்க அலுவலகத் தில் வெள்ளியன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் பழனிசாமி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்து சாமி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் தினகரன், சிபிஐ சாமி நாதன், காங்கிரஸ் கட்சி கோபாலகிருஷ்ணன், மதிமுக பாபு, அதிமுக விஜய் ஆனந்த், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து
2 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து நாமக்கல், ஜன.10- ராசிபுரம் அருகே 2 வீடுகள் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை யாகின. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா, புதுகாலனி பகுதியில் கண்ணன் - முத்துமலர் தம்பதியினர் தங்களின் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். மல்ல சமுத்திரம் அருகே உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு இரண்டு குழந்தைகளுடன் வியாழனன்று இத்தம்பதி சென்ற நிலையில், நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அவர்களுக்கு சொந்தமான அருகருகே உள்ள இரண்டு வீடுகளும் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், தீயணைப் புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சற்று நேரத்திலேயே கொழுந்து விட்டு எரிந்த தீயால் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், மெத்தை, பிரிட்ஜ் மற்றும் பீரோவிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு பவுன் தங்க நகை, ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளி கொலுசுகள், மோதிரம் என அனைத்தும் தீக்கிரையாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராசி புரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டின் உரிமையாளர் கண்ணன் குடும் பத்துடன் வெளியே சென்று விட்டதால், உயிர் சேதம் எது வும் ஏற்படவில்லை. இரண்டு வீடுகளிலும் சேர்ந்து மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையா கியதாகவும், வீட்டின் பட்டா சிட்டா உள்ளிட்ட ஆவணங்களும் தீயில் கருகியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
பட்டியலினப் பெண்களை தாக்கிய ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மீது வழக்குப்பதிய மறுப்பதா?
பட்டியலினப் பெண்களை தாக்கிய ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மீது வழக்குப்பதிய மறுப்பதா? ஈரோடு, ஜன.10- அந்தியூர் அருகே பட்டியல் சாதி பெண்களை தாக்கிய காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், நகலூர் கிராமத் திற்குட்பட்டது குண்டு மூப்பனூர். இங்கு வசிக்கும் பட்டியல் சாதியினர் குடியிருப்பில் ஊராட்சி நிர்வாகம் மின்கம்பம் நட்டு தெருவிளக்கு அமைக்கும் பணியை மேற்கொள்ளப்பட் டது. ஆனால் பக்கத்து தோட்டத்து உரிமையாளரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான முத்துசாமி அந்த மின்கம் பங்களை அகற்றியுள்ளார். அதன் பிறகு பிரச்சனைக்குரிய தாகக் கருதப்படும் நிலத்தை அளவீடு செய்து அத்துக்கற்கள் நடப்பட்டது. அதையும் மேற்படி முத்துசாமி அடித்து உடைத் துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களை, தகாத வார்த்தைகளில் பேசி குறிப்பாக பெண்களை இழிவாகப் பேசி அடித்து கீழே தள்ளினார். அதில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரி விக்கப்பட்டது. ஆனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயத் தொழிலா ளர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய் தனர். வழக்குப்பதிவு செய்கிறோம். அந்த வழக்கில் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கில் திருத்தம் செய்கிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், 10 நாட்கள் கடந்த பின்னும், வழக்குப்பதிவு செய்த தாகவோ, கைது நடவடிக்கையோ இதுவரையில் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களும், அப்பகுதி மக்களும் மீண்டும் அந்தியூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆதிக்க சாதியை சேர்ந்த மேற்படி நபரின் அராஜகத்தை வீடியோ ஆதா ரங்கள் மூலம் சமர்ப்பித்தும், காவல் துறை வழக்குப்பதிவு செய்யவோ, நடவடிக்கைவோ எடுக்க தயங்குவது, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஜனநாயக அமைப்புகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பளம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சம்பளம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நாமக்கல், ஜன.10- ராசிபுரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் 90க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மருத்துவ காப்பீடு தொகை பிடித்தம் போன்றவை முறையாக பராமரிக்கப்படுவ தில்லை. மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங் கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டி, வியாழனன்று பணி களைப் புறக்கணித்து பேருந்து நிலையம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து நகராட்சி அலுவலர்கள் தூய்மைப் பணியாளர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை உதகை, ஜன.10- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில், வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவி தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வேனின் உதவி யாளர், கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (34), சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட் டுக்கு அழைத்துச் சென்று, மாணவிக்கு பாலியல் வன்கொ டுமை இழைத்துள்ளார். நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராத தால் குடும்பத்தினர் இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், ஆய்வாளர் வேல் முருகன் தலைமையிலான போலீசார் மாணவி மாயம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைய றிந்த ஜெயப்பிரகாஷ் மாணவியை கோத்தகிரி பகுதியில் விட்டுவிட்டு சென்று விட்டார். இதன் பின்னர் உறவினர்கள் சிறு மியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீ சார் ஜெயபிரகாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசா ரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன் படி போக்சோ சட்டத்தில் கைதான ஜெயபிரகாசுக்கு 20 ஆண்டு கள் சிறை தண்டனையும் ரூ.11,500 அபராதமும் விதித்து நீதி பதி செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து போலீசார் ஜெயபிரகாசை கோவை மத்திய சிறையில் அடைத் தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.