districts

img

சிபிஎம், விவசாய சங்க முயற்சிக்கு வெற்றி குட்டையில் வண்டல் மண் எடுக்க அனுமதி

திருப்பூர், செப். 3 – திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம்பாளையம் குட்டையில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள் ளது. பரமசிவம்பாளையம் கருப்பராயன் கோயில் அருகில் உள்ள குட்டையை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து  முயற்சி மேற்கொண்டு வந்தன. 22 முறைக்கு மேல் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத் துடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், விவசா யிகள் குறை தீர்க் கூட்டத்திலும் வலியுறுத் தப்பட்டது. இதன் விளைவாக மாவட்ட ஆட்சி யர் இந்த குளத்தில் விவசாயிகள் இலவசமாக  வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி உத்த ரவு பிறப்பித்தார். மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயி கள் சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கு  வெற்றி கிடைத்துள்ளது என்று வடக்கு ஒன் றிய விவசாயிகள் சங்கச் செயலாளர் எஸ்.அப் புசாமி கூறினார்.