கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 82 மனுக்களில், 74 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்ப்பு முகாமில் குடும்ப பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை, மற்றும் இடம் பிரச்சனை என 82 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் விசாரணைக்குப் பின் 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்கள் மீது ரசீது பதிவு செய்யப்பட்டது. 74 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. மேலும் 8 மனுக்கள் மேல் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் புகார் மீது தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதே போலப் பிற வேலை நாட்களிலும் அந்தத்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களைச் சந்தித்து பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பாகத் தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறையால் நடத்தப்படும் இந்த குறை தீர்ப்பு முகாம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது