districts

img

கோவையில் மாநகர காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி!

கோவை குறிச்சி குளத்தில் மாநகர காவல்துறை காவலர்களுக்கான பேரிடர் கால மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 

தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தமிழகம்  முழுவதும் தமிழ்நாடு கமாண்டோ பள்ளி சார்பில், பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து காவல்துறையினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாகக் கோவை, திருப்பூர், மதுரை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேரிடம் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 60 காவலர்களுக்கு பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை துவங்கியது. இந்த பயிற்சி முகாமில் முதல் நாள் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிபிஆர் சிகிச்சை உள்ளிட்ட முதலுதவிகள் வழங்குவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.  இரண்டாவது நாளான இன்று  பேரிடர் மற்றும்  பெருவெள்ளம் காலங்களில் வெள்ளத்திலிருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது எ iன்பது குறித்தன பயிற்சி குறிச்சி குளத்தில் நடைபெற்றது.

இதில் 60 காவலர்களுக்குப் படகு இயக்குவது, பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்பது,  குறித்தான பயிற்சி வழங்கப்பட்டது.  இதற்காக கமாண்டோ பள்ளியைச் சேர்ந்த 3 காவலர்கள் பயிற்சி அளித்தனர். குறிச்சிக் குளத்தில் நடைபெற்ற பேரிடர் பயிற்சி முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை )  ஆயுதப்படை மைதானத்தில் இந்த கட்டிடங்களிலிருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.