திருப்பூர், டிச.20 - ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனியன்று திருப் பூரில் சுத்த சன்மார்க்க சத்திய சங்க வளாகத்தில் ஓய்வூதி யர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மு.பாலச் சந்திரமூர்த்தி தலைமை வகித்தார். “எட்டாவது ஊதியக் குழு வும், ஓய்வூதியர்கள் எதிர்பார்ப்பும்” என்ற தலைப்பில் அஞ்சல் ஓய்வூதியர் சங்க மேற்கு மண்டலச் செயலாளர் எஸ்.கருணா நிதி கருத்துரை வழங்கினார். “எம் செல்வம் கொள்ளை போகவோ” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ந.ஜெயச்சந்திரன் கருத்துரை வழங்கி னார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார்அகமது, அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சௌந்தர பாண்டியன், கிளைச் செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
