கோவை சங்கனூர் ஓடையில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது.
கோவை ரத்தினபுரி ஹட்கோ காலணி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சங்கனூர் ஓடையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பணியின் போது ஓடை ஓரத்தில் இருந்த சுரேஷ், லட்சுமணன், தனலட்சுமி ஆகிய மூன்று பேரின் வீடுகள் இடிந்து ஓடையில் விழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க பரிந்துரைக்கப்படும் என மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் மூலம் சித்தாபுதூர் மற்றும் கீரணத்தம் பகுதியில் 3 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்திகுமார், ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் வழங்கினர்.