districts

img

புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

சேலம், ஜன.3- காடையாம்பட்டி அருகே கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் ரா.ராஜேந்திரன் வியாழனன்று திறந்து வைத் தார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றி யம், உம்பிளிக்கம்பட்டியில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி மையம் மற்றும் நடுப் பட்டியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவை திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை  அமைச்சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி முன்னிலையில், புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கொலுசு உற்பத்தியில் தலை சிறந்து விளங்கக்கூடிய சேலம் மாவட்ட கொலுசு உற் பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அரியாகவுண் டம்பட்டியில் 1.20 ஏக்கர் பரப்பளவில் ரூ.25.29 கோடி மதிப் பீட்டில் பன்மாடி உற்பத்தி மையக்கட்டடம் அமைக்கப் பட்டு வருகிறது. மேலும், சேலம், சிப்காட் ஒருங்கி ணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீர் அம்மா பாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு  செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள் ளது, என்றார். இந்நிகழ்வில், உம்பிளிக்கம்பட்டி ஊராட்சி  மன்றத் தலைவர் ஆர்.மரகதவள்ளி ராஜாராம், துணைத் தலைலர் என்.ஜெயராணி, நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வி.செல்வராணி வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.