நாமக்கல், டிச.20- அனைத்து தொகுப்பூதிய செவிலியர்க ளையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி செவி லியர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்க ணிப்பு மற்றும் தொடர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தேர்தல் வாக்குறுதியில் குறிப் பிட்டது போல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதர வாக சனியன்று நாமக்கல் மாவட்ட தொகுப் பூதிய செவிலியர்கள் அனைவரும் ஒன்று கூடி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளா கம் முன்பு பணி புறக்கணிப்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சௌமியா தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள் வெள்ளியன்று கோவை அரசு மருத்துவ மனையில் கொட்டும் பனியில் இரவு முழுவ தும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்த னர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சனி யன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் செவிலியர்கள் தங்கள் கோரிக் கைகளை முன்வைத்து காத்திருக்கின்ற னர். இந்நிலையில், சிஐடியு மாவட்டச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் அருணகிரிநாதன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, தலைவர் ராஜா, மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ஜூல்பிகர் மற்றும் அரசு ஊழி யர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரி வித்தனர். சேலம் சேலம் மாவட்ட செவிலியர்கள் மேம் பாட்டு சங்கத்தின் சார்பில், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை முன் பாக நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பு.சுரேஷ், அனைத்துத்துறை மருந் தாளுனர் சங்க செயலாளர் கிரிராஜன், செவி லியர்கள் சுதா, சசிகலா உள்ளிட்ட பலர் கண் டன உரையாற்றினர். தருமபுரி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு மேம்பாட்டு செவிலியர் சங்க மாவட்டச் செய லாளர் நித்தியகலா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ ரசி, தங்கமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தருமபுரி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ.தெய்வானை, பொருளாளர் எம்.அன்பழகன், துணைச்செயலாளர் மீன் முருகன், துணைத்தலைவர் அகிலன் அமிர்த ராஜ், நிர்வாகிகள் சி.காவேரி, தினமணி, மகேஸ்வரி, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.பெருமாள், பொருளாளர் கேச வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.