கோவை, ஜன. 10- பொங்கல் தினத்தன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றம் செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச் சருக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் இயக் கத்தில் வெள்ளியன்று ஈடுபட்டனர். தமிழக மக்களின் முக்கிய பண்டி கையான பொங்கல் விழா ஜனவரி 14 அன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாக மாக கொண்டாடப்படும் விழாவாகும். இந்நிலையில், பொங்கல் தினத்தன்று தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) அறிவிப்பின்படி யுஜிசி-யின் நெட் தேர்வு கள் ஜனவரி 3 முதல் ஜனவரி 16 வரை, ஜனவரி 14 உட்பட தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாலிபர் சங்கத்தி னர் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்தி ருப்பதாவது, தமிழர்களின் பண்பாட்டு திருவிழா அன்று, தேர்வு நடைபெறும் என்பது தமிழகத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும். ஜனவரி 13 முதல் ஜனவரி 16 தேதி கள் வரை பொங்கல் விழாக்கள் கொண் டாடப்படுகிறது என்று ஏற்கனவே ஒன் றிய அரசாங்கம் அறியும். ஆனாலும் பல வருடங்களாக பொங்கல் தினத்தன்று ஒன்றிய அரசின் தேர்வுகளை தொடர்ச்சி யாக நடத்த முயற்சித்து வருகிறீர்கள். இந்த போக்கை கைவிட வேண்டும். தமி ழக அரசு யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றி வைக்க கோரி தங்களுக்கு கடி தம் அனுப்பி உள்ளது. மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இந்த தேதியை மாற்றி வைக்க கோரி கடிதம் அனுப்பி உள்ளார்கள். எனவே தமிழக மக்களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் தினத்தில் நடைபெறும் தேர்வை வேறொரு தினத்தில் மாற்றி வைக்க வேண்டுமென அதில் தெரிவித் துள்ளனர்.