திருப்பூர், பிப்.7- திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையம் முதல் பொல் லிக்காளிபாளையம் வரை மையத்தடுப்பு, எல்.இ.டி மின்வி ளக்குகள் மற்றும் உயர்கோபுர எல்.இ.டி. மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் துவக்கி வைத்த னர். திருப்பூர் மாநகராட்சி, கோவில்வழி பேருந்து நிலையம் அருகில் பொன்கோவில் நகரில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.69.89 லட்சம் மதிப்பீட்டில் முதல்கட்டமாக கோவில்வழி பேருந்து நிலையம் முதல் பொல்லிக்காளிபா ளையம் வரை மையத்தடுப்பு எல்.இ.டி மின்விளக்குகள் மற் றும் உயர்கோபுர எல்.இ.டி. மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்சியில், மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்ப ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.