districts

img

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

தருமபுரி, டிச.20- ஆலையை இயக்க வலியு றுத்தி தொழிலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்ட நிலையில், வெள்ளி யன்று பாலக்கோடு கூட்டுறவு சர்க் கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட் டில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. தமிழகத்திலேயே அதிகளவில் சர்க்கரை உற்பத்தி திறன் பெற்ற சிறந்த ஆலை என  பெயர் பெற்ற நிலையில், நாளடை வில் இதன் செயல்திறன் படிப்படி யாக குறைந்தது. பெயரளவிற்கு மட்டும் அரவை தொடங்கி, தொடங் கிய வேகத்திலேயே மூடப்பட்டு வருகிறது. இதனால், இந்த சர்க்க கரை ஆலையை நம்பியுள்ள தொழி லாளர்கள், விவசாயிகள், லாரி ஓட் டுநர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள னர். மேலும், அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு அரவை  நிறுத்தப்படுவதும், வெல்லபாகு வெளியேறி நட்டம் ஏற்படுவது என  நிர்வாகம் செயலற்று போனதால், புகழ் பெற்ற இந்த ஆலை மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது. முழுமையான கரும்பு இல்லாமல் அரவையை தொடங்கி னால் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால், கரும்பு அரவையை பெயரளவில் தொடங்கிவிட்டு சத்தம் இல்லாமல் மூடிவிட்டு அனைத்து கரும்புகளை யும் அரூர் சுப்ரமணிய சிவா சர்க் கரை ஆலைக்கு அனுப்ப அதிகாரி கள் திட்டமிட்டனர். இதனால் கடந்த புதனன்று தொழிலாளர்கள் ஆலை வாயில் முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெள்ளியன்று 2025 - 26 ஆம் ஆண்டு அரவைப் பரு வத்துக்கான அரவைப் பணியை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆலை யில் நிகழாண்டில் 52,000 மெ.டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தமாக அர வைக்கு 2,200 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையில் இயங்கிவரும் 12 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத் தின் மூலம் இதுவரை 3,84,23,130  யூனிட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டு, ஆலை பயன்பாட்டுக்கு 1,20,53,990 யூனிட் எடுக்கப்பட்டு, மீதமுள்ள 1,95,49,200 யூனிட் மின் வாரியத்துக்கு வழங்கப்பட்டது. 2025 – 26 ஆம் ஆண்டு அரவைப் பரு வத்துக்கு விநியோகம் செய்யப்ப டும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,307 மற்றும் தமிழக அரசின் ஊக்கத் தொகை தனியே வழங்கப்படவுள் ளது, என்றார்.