மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர், நவ. 11- அவிநாசி பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நான்கு தொழிலாளர்கள் குடிநீர், மயானம், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு வகையான வேலைகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிற பேரூ ராட்சிகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு அவி நாசி பேரூராட்சியில் துப்புரவு பணி வழங்கப்பட்டுள் ளது. இது 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் எங்களுடைய உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நான்கு பேருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் தொழிலாளர் மனு அளித்தனர்.