உதகை, செப். 8 கீழ்குந்தா பேரூராட்சியில் நில வும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்ப டும் வகையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது. கீழ்குந்தா பேரூராட்சியில் மஞ் சூர், மஞ்சூர் ஹட்டி, துானேரி, ஓணிக் கண்டி, குந்தாபாலம், கரியமலை, பாக்கோரை, கீழ்குந்தா, மட்டக் கண்டி, கெத்தை மற்றும முள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பேரூ ராட்சியாக கீழ்குந்தா உள்ளது. இங் குள்ள பதினைந்து வார்டுகளிள், பத் தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்க ளின் குடிநீர் தேவைக்காக அம்மக் கல், கட்லாடா, அப்புநாய் ஆகிய இடங்களில் உள்ள நீராதாரங்களை கொண்டு மேல்நிலை தொட்டியில் சேமிக்கப்படும் நீரை விநியோகிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், வறட்சி ஏற்படும் காலங்களில் கடுமையான குடிநீர் பற் றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியு றும் நிலை ஏற்பட்டது. கீழ்குந்தா பேரூ ராட்சியில் குடி நீர் பற்றாக்குறை இல் லாத வகையில் நிரந்தர தீர்வு ஏற்ப டுத்த வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வருகிறது. இந்நிலையில், கீழ்குந்தா பேரூராட்சி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மஞ் சூர் அருகே குந்தாபாலம் சிவன் கோவில் அருகே, குந்தா – ஒசஹட்டி நீராதாரத்திலிருந்து கொண்டுவ ரப்படும் தண்ணீரை அங்கு தடுப் பணை கட்டி தண்ணீர் சேமிக்கப்ப டும் வகையில், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் புதிய கூட்டு குடிநீர் திட்டத் திற்கான திட்ட அறிக்கை தயாரித்தது. பின், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலு டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. நடப்பு நிதியாண்டில், ‘குந்தா – ஒசஹட்டி’ கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, ரூ. 10.32 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் துவங்கப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத் தில் கீழ்குந்தா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு எட்டப்படும் என்பதால் இப்பகுதி மக்கள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.