districts

img

செல்போன் கோபுரம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.20- பென்னாகரம் அருகே உள்ள முதுகம் பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசுப்பள்ளி,  அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வங்கி  செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் கிராமத்தில் தொலைத்தொடர்பு வசதி இல்லா ததால், அத்தியாவசியத் தேவைகளுக்கு பக்கத்து கிராமங்களுக்கு சென்று, செல் போன் டவர் கிடைத்த பின்பு வேலையை செய்ய வேண்டிய நிலை இருந்து வருகி றது. முதியோர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை பெறுவதற்கும் வாகனங்கள் மூலம், வயதானவர்களை அழைத்து சென்று பக்கத்து கிராமங்களில் கைரேகை வைத்த பின்பு பணம் கிடைப்பதாகவும், ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு  களில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டு வரு கின்றனர். இப்பகுதியில் செல்போன் கோபு ரம் அமைத்துத்தர வேண்டுமென பலமுறை  அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர் உள் ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை  வைத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. மேலும், இதுதொடர்பாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த பயனுமில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, கிராமத்தில் படிக்கும் பள்ளி குழந் தைகள் மற்றும் கிராம மக்களுக்கு உதவும் வகையில், இப்பகுதியில் செல்போன் கோபு ரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.